
ரோஹித் காயம்
2020 ஐபிஎல் தொடரின் இடையே ரோஹித் சர்மா இடது காலில் காயம் அடைந்தார். அவருக்கு கடும் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனால், அவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயனதுக்கான இந்திய அணிகளில் இருந்து நீக்கியது பிசிசிஐ.

கோலி தான் காரணமா?
இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கு கேப்டன் விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. இதனிடையே ரோஹித் பயிற்சி செய்யத் துவங்கினார். ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கோலி மற்றும் தேர்வுக் குழுவை சரமாரியாக விமர்சனம் செய்து வந்தனர்.

பிசிசிஐ என்ன சொன்னது?
இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், ரோஹித் சர்மா காயம் மோசமானது. அவர் அதில் இருந்து மீள பல வாரங்கள் ஆகும் என கூறி வந்தனர். பிசிசிஐ தலைவர் கங்குலி கூட அதையே தான் கூறினார். ஆனால், ரோஹித் சர்மா அதிரடியாக மீண்டும் களத்துக்கு வந்தார்.

ரோஹித் எடுத்த முடிவு
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கினார். அவர் தன் உடற்தகுதியை பரிசோதிக்க இந்தப் போட்டியில் ஆடி இருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தன் காயம் அணியில் இருந்தே நீக்கும் அளவுக்கு மோசமாக இல்லை என்பதை அவர் பிசிசிஐக்கு சுட்டிக் காட்டவே களமிறங்கினார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் இடையே சண்டை
இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் காயத்தை காட்டி அவரை அணியில் இருந்தே நீக்க விராட் கோலி திட்டமிட்டதாகக் கூறி ரோஹித் சர்மா ரசிகர்கள் அவரை விளாசி வந்தனர். பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவை கிண்டல் செய்து மீம் வெளியிட்டனர்.

4 ரன்னில் அவுட்
அதே சமயம், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதை சுட்டிக் காட்டி விராட் கோலி ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்தனர்.

நன்றி ரோஹித்
சிலர் நன்றி ரோஹித் சர்மா என ஹேஷ்டேக் பரப்பத் துவங்கினர். அதாவது, ரோஹித் சர்மா மோசமான பார்மில் இருப்பதால் அவரை அணியில் இருந்து நீக்கி இருப்பதாகவும், அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எல்லை மீறி கிண்டல் செய்தனர் விராட் கோலி ரசிகர்கள். இதனால், சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications