Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லையே புரட்டி போடும் பிளான்.. விஸ்வரூபம் எடுத்த மும்பை இந்தியன்ஸ்.. ரோஹித் வகுத்த அந்த வியூகம்!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. முழுமையான ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் உருவெடுத்து உள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எந்தெந்த அணிகள் எல்லாம் பிளே ஆப் செல்லும் என்று கணிக்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மேலும் இரண்டு அணிகள் பிளே ஆப் செல்ல வேண்டும். புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடிக்க இதனால் கடுமையாக போட்டி நிலவி வருகிறது.

மும்பை அணி

மும்பை அணி

இந்த 2020 ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. முழுமையான அணியாக மும்பை இந்தியன்ஸ் உருவெடுத்து உள்ளது. மும்பை அணியின் பேட்டிங், பவுலிங் என்று எல்லாமே மிகவும் வலிமையானதாக இருக்கிறது. ஒரு அணியில் சில வீரர்கள் பார்மில் இருந்தாலே அந்த அணி எளிதாக வென்று விடும்.. ஆனால் மும்பை அணியில் விளையாடும் வீரர்கள் தொடங்கி பெஞ்சில் இருக்கும் வீரர்கள் வரை எல்லோரும் முழு பார்மில் இருக்கிறார்கள்.

எப்படி

எப்படி

முதலில் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் டி காக், ரோஹித் சர்மா, பாண்டியா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், குர்னால், பொல்லார்ட் என்று அணியின் கடைசி ஆர்டர் வரை எல்லோரும் மொத்தமாக ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அணியில் ஓப்பனிங் சொதப்பினால் மிடில் ஆர்டர் பார்த்துக் கொள்ளும், மிடில் ஆர்டர் சொதப்பினால் டெயில் வீரர்கள் அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார்கள்.

பவுலிங்

பவுலிங்

டெல்லி, சிஎஸ்கே உட்பட எந்த அணியிலும் பேட்டிங் ஆர்டர் இவ்வளவு வலிமையாக இல்லை. எல்லா வீரர்களையும் வீழ்த்தி, ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பையை சாய்க்க முடியும். அதிலும் பாண்டியா, பொல்லார்ட் இருவருமே இந்த சீசனில் பார்மிற்கு திரும்பி உள்ளனர்.பாண்டியா ஓவர் போடவில்லை என்றாலும் கூட பேட்ஸ்மேனாக கடைசி நேரத்தில் வந்து அதிரடி காட்டுகிறார்.

பவுலிங் ஆர்டர் எப்படி

பவுலிங் ஆர்டர் எப்படி

இன்னொரு பக்கம் மும்பை அணியின் பவுலிங் ஆர்டரும் சிறப்பானதாக இருக்கிறது. பும்ரா. பாட்டின்சன், நாதன் நைல், டிரெண்ட் போல்ட், ராகுல் சாகர், பொல்லார்ட், குர்னால் என்று மும்பை அணியில் இருக்கும் பவுலர்கள் எல்லோருமே எதிரணிக்கு அச்சுறுத்தல் ஊட்ட கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இதில் இல்லாமல் பெஞ்சில் இருக்கும் மிட்ச்ல் மெக்லாந்த், கிறிஸ் லைன் போன்ற வீரர்களும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அசைக்க முடியாது

அசைக்க முடியாது

இதனால் இந்த ஐபிஎல் சீசனில் அசைக்க முடியாத அணியாக மும்பை மாறியுள்ளது. நேற்று கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு முன் பேட்டி அளித்த ரோஹித் சர்மா.. எங்கள் அணியில் பல வீரர்கள் பார்மில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. வரும் நாட்களில் அவர்களை களமிறக்குவோம். இப்போது இருக்கும் சில வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ரொட்டேஷன் முறையில் வீரர்களை இறக்குவோம் என்று ரோஹித் குறிப்பிட்டு இருந்தார்.

வியூகம்

வியூகம்

இதுதான் ரோஹித்தின் புதிய வியூகம்.இதனால்தான் நேற்று மும்பை அணியில் பாட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் நைல் அணியில் சேர்க்கப்பட்டார். பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டதால் மும்பை அணி புதிய லெவன் உடன் இறங்கி சோதனை முயற்சிகளை செய்ய உள்ளது. அணியில் வாய்ப்பு கிடைக்காமல்இருக்கும் மற்ற மாஸ் வீரர்களை மும்பை களமிறக்க உள்ளது. இதனால் மும்பையின் பிளெயிங் லெவன் கணிக்க முடியாத நிலைக்கு சென்று உள்ளது.

வியூகம் முடியாது

வியூகம் முடியாது

அடுத்தடுத்த போட்டிகளில் மும்பையில் யாரெல்லாம் களமிறங்குவார்கள் என்ற சந்தேகம் வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே, பெங்களூர் போன்ற அணிகள் மும்பைக்கு எதிராக எளிதாக வியூகங்களை வகுக்க முடியாது. ஏற்கனவே மும்பை வலுவாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் ஒவ்வொரு போட்டியிலும் யார் இறங்குவார் என்பதே சந்தேகம் ஆகியுள்ள நிலையில்.. எதிரணிகள் மும்பைக்கு எதிராக திணற போகின்றன.

தலைவலி

தலைவலி

சிஎஸ்கே, பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகளில் எல்லாம் வெல்ல வேண்டும். அதிலும் சிஎஸ்கே மும்பையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இப்படி இருக்கும் போது மும்பை அணி பிளேயிங் லெவனில் நிகழ்த்தும் இந்த மாயாஜாலம் சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 12:01 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+