
ஆதிக்கம்
இன்று மும்பையில் பாட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ்,இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட் , நாதன் நைல், பும்ரா ஆகியோர் இன்று மும்பை அணியில் ஆடுகிறார்கள். மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர்தான் எப்போதும் வலுவாக இருக்கும் ஆனால் இன்று பவுலிங் மிக சிறப்பாக இருந்தது.

பாட்டின்சன் நீக்கம்
மும்பை அணியில் பாட்டின்சன் நீக்கப்பட்டு இன்று நாதன் நைல் சேர்க்கப்பட்டார். ரோஹித் சர்மாவின் இந்த பிளான் மொத்தமாக ஆட்டத்தையே மாற்றியுள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பாக டெத் ஓவர் வீச கூடியவர்தான் நாதன் நைல். அணியில் ஏற்கனவே பும்ரா இருக்கும் போது டெத் ஓவர்கள் வீசுவதற்காக நாதன் நைலை ரோஹித் சர்மா களமிறக்கினார். ஸ்விங் பந்துகளை 140+ வேகத்தில் வீச கூடிய நாதன் நைல் மும்பை அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

யார்
மும்பை அணியில் ஏற்கனவே பும்ரா, போல்ட் என்ற உலகின் இரண்டு டாப் பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் தற்போது ஸ்விங் புயல் நாதன் நைல் வேறு இன்று களமிறங்கி உள்ளார். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் ஸ்பின் பவுலர் ராகுல் சாகர் மாஸ் பார்மில் உள்ளார். இவர்கள் இல்லாமல் இடையில் பவுலிங் செய்ய பொல்லார்ட் வேறு இருக்கிறார்.

பாண்டியா இல்லை
இன்னொரு பக்கம் பவுலிங் செய்ய குர்ணால் பாண்டியாவும் உள்ளார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய முடியாத நிலையில் இருக்கும் போதும் கூட மும்பை அணியின் பவுலிங் மிக சிறப்பாக உள்ளது. மும்பை அணிக்குள் நாதன் நைல் எடுக்கப்பட்டது மொத்தமாக அணியின் பார்முலாவை மாற்றியுள்ளது. மும்பை அணியின் பவுலிங் ஆர்டரை மொத்தமாக ரோஹித் இதன் மூலம் மாற்றி உள்ளார்.

மும்பை அணி
இதனால்தான் இன்று கொல்கத்தாவின் வலுவான பேட்டிங் ஆர்டர் அடுத்தடுத்து உடைந்து நொறுங்கியது. ராகுல் திரிப்பாதி, சுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரசல் என்று யாருமே மும்பையின் பவுலிங் முன் நிலைத்து நிற்க முடியவில்லை. வந்த வேகத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி பெவிலியன் சென்றார்கள்.

மற்ற அணிகள்
பும்ராவை மட்டும் நம்பி இருக்காமல் மிக சிறப்பான பவுலிங் ஆர்டரை ரோஹித் சர்மா உருவாக்கி உள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளுக்கு அச்சறுத்தல் செய்ய கூடிய அணியாக மும்பை மாறி உள்ளது. மும்பைக்கு எதிரான 150+ ஸ்கோர்களை எடுப்பது கூட இனி வரும் போட்டிகளில் சவாலான காரியமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். மற்ற ஐபிஎல் அணிகள் எப்படி இதை எதிர்கொள்ளும் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications