Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 ஓவரில் 71 ரன்.. வேற எந்த டீமாலும் இப்படி அடிக்க முடியாது.. அந்த ஒரு டீமால் மட்டும் தான் முடியும்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிரடியில் அரங்கை அதிர வைத்து வரும் ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி கடைசி ஓவர்களில் ரன் குவிப்பில் திணற வைத்தது.

எந்த அணியும் இத்தனை வேகமாக ரன் குவிக்க முடியாது என வியக்கும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா, சௌரவ் திவாரி வெளுத்து வாங்கினர். பாண்டியா 7 சிக்ஸ் அடித்து மிரள வைத்தார்.

ராஜஸ்தான் - மும்பை மோதல்

ராஜஸ்தான் - மும்பை மோதல்

2020 ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

டி காக் ஏமாற்றம்

டி காக் ஏமாற்றம்

துவக்க வீரர் க்வின்டன் டி காக் முதல் ஓவரிலேயே ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இஷான் கிஷன் 37, சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுத்தனர். பொல்லார்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். திவாரி களத்தில் இருக்க அப்போது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வ வந்தார். அதுவரை மும்பை அணி சற்றே நிதானமாக ரன் குவித்து வந்தது.

பாண்டியா அதிரடி

பாண்டியா அதிரடி

ஹர்திக் பாண்டியா களமிறங்கிய பின் ஆட்டம் மாறியது. 17வது ஓவரில் சௌரப் திவாரி 2 ஃபோர், 1 சிக்ஸ் அடிக்க 17 ரன்கள் கிடைத்தது. அடுத்து 18வது ஓவரில் 4 சிக்ஸ் அடித்து அங்கித் ராஜ்புத் பந்துவீச்சை துவம்சம் செய்தார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரில் 27 ரன்கள் கிடைத்தது.

ஆர்ச்சர் ஓவர்

ஆர்ச்சர் ஓவர்

19வது ஓவரில் திவாரி விக்கெட் வீழ்ந்தது. ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரில் பாண்டியா சகோதரர்கள் அடக்கி வாசித்தனர். 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மீண்டும் 20வது ஓவரில் ஹர்திக் பாண்டியா சிக்ஸ், ஃபோர் விலாச 27 ரன்கள் கிடைத்தது.

3 ஓவர்களில் 71 ரன்கள்

3 ஓவர்களில் 71 ரன்கள்

17, 18 மற்றும் 20வது ஓவர்களில் மட்டும் 71 ரன்கள் எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ராஜ்புட் மற்றும் கார்த்திக் தியாகி ஓவர்களில் தலா 27 ரன்கள் எடுத்து மிரள வைத்தது அந்த அணி. 160-170 ரன்கள் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா, ஸ்ரேயாஸ் கோபால் 25 முதல் 31 ரன்கள் அவரை கொடுத்திருந்தனர். அங்கித் ராஜ்புட் 60 ரன்களும், கார்த்திக் தியாகி 45 ரன்களும் கொடுத்திருந்தனர்.

Story first published: Sunday, October 25, 2020, 22:33 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+