Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சாரி சொல்ல மாட்டியா".. அதிர்ந்து போன பண்ட்.. நெஞ்சை குறி வைத்து பந்தை எறிந்த சைனி.. என்ன நடந்தது?

துபாய்: நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி பவுலர் சைனி செய்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. எல்லா போட்டிகளை போல இந்த போட்டியிலும் டெல்லியின் பேட்ஸ்மேன்கள்தான் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை டெல்லி அணிதான் பவுலிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி 20 ஓவரில் 196 ரன்கள் எடுத்தது.அதன்பின் இறங்கிய பெங்களூர் வெறும் 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி பவுலர் சைனி செய்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் அணியின் புதிய நம்பிக்கையாக சைனி உருவெடுத்து இருக்கிறார். ஆக்ரோஷமான வேகம், துல்லியமான யார்க்கர் என்று சைனி இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் சைனி கொஞ்சம் அதிகமாக ரன் கொடுத்தார். நன்றாக பந்து வீசி வந்தவர் திடீர் என்று நேற்று நிறைய தவறுகள் செய்தார். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் என்று எல்லோரும் சைனி பந்துகளை பறக்கவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சைனி ஒரு நிமிடம் குழம்பி போனார்.

குழப்பம் அடைந்தார்

குழப்பம் அடைந்தார்

இதனால் பதற்றம் அடைந்த சைனி, தான் போட்ட 14வது ஓவரின் 5வது பந்தில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் நெஞ்சை குறி வைத்து பந்து வீசினார். 145 கிமீ வேகத்தில் நெஞ்சை குறி வைத்து சைனி வீசினார். இதை மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் கையால் தடுத்தார். இதன் காரணமாக அவரின் கையில் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்டது

காயம் ஏற்பட்டது

இதையடுத்து மருத்துவர்கள் வந்து மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் கையில் மருந்து தடவிவிட்டு சென்றனர். வேகமாக வந்த பந்து நெஞ்சில் பட கூடாது என்று அவர் கையால் தடுத்தார். இதுதான் காயத்திற்கு காரணம். இதை பார்த்துக் கொண்டு இருந்த சைனி ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. எதுவும் சொல்லாமல் சென்றார். இதனால் கோபம் அடைந்த மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

சாரி கேட்டார்

சாரி கேட்டார்

இந்த பவுண்டரிக்கு பின் பண்ட் கோபமாக சைனியிடம் சென்று.. என்ன சாரி கேட்க மாட்டியா என்று கூறினார். இதன்பின் சைனி மார்க்ஸ் ஸ்டோய்னிஸிடம் சைகையில் வருத்தம் தெரிவித்தார். ஆனால் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், பண்ட் இருவரும் இதனால் சமாதானம் அடையவில்லை. சைனி போட்ட அடுத்த ஓவரில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் அவரின் பந்துகளை கிழித்து எடுத்தார்.

மாஸ்

மாஸ்

அதேபோல் பண்டும் சைனி பந்துகளை எல்லா எல்லைக்கும் பறக்கவிட்டு சிக்ஸ் அடித்தார். இதை கொஞ்சம் கூட சைனி எதிர்பார்க்கவில்லை. கடைசி வரை டென்ஷனாகவே சைனி இருந்தார். 3 ஓவர் போட்டு 48 ரன்கள் இவர் கொடுத்தார். இவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதில் நோ பால் வேறு போட்டு கோலியை இவர் கடுப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 6, 2020, 9:07 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+