Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது சரியில்லை.. கோலி சொல்லியும் கேட்காத ஆர்சிபி சைனி.. மொத்தமாக தடை விதியுங்கள்.. வலுக்கும் கோரிக்கை

துபாய்: ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நவ்தீப் சைனி மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக நவ்தீப் சைனி உருவெடுத்துள்ளார். இந்த வருடம் பெங்களூர் அணிக்காக இவர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பெங்களூர் அணியின் வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக உள்ளார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றிபெற்றது.பெங்களூரின் இந்த வெற்றிக்கு நவ்தீப் சைனி முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார்.

காரணம் ஏன்

காரணம் ஏன்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் நவ்தீப் சைனி, டெல்லி வீரர் மார்க்ஸ் ஸ்டாய்னிசை நோக்கி பந்தை வேகமாக வீசினார். நெஞ்சை நோக்கி பந்தை வீசி எறிந்தார். அவரை தாக்குவது போல இவர் பந்தை வீசினார். அதிலும் இந்த பந்து 145 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வந்தது. இதனால் ஸ்டோய்னிசுக்கு கையில் கூட காயம் ஏற்பட்டது.

மோசம்

மோசம்

இப்படி மோசமாக பந்து வீசிய நவ்தீப் சைனி நேற்று ஸ்டோய்னிசிடம் இதற்காக மன்னிப்பு கூட கேட்கவில்லை. திமிராக பவுலிங் வீசிய போதிலும் கூட நவ்தீப் சைனி அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. இந்த போட்டியில் மட்டும் நவ்தீப் சைனி இப்படி பந்து வீசவில்லை. இதற்கு முன் மும்பைக்கு எதிரான போட்டியிலும் இதேபோல்தான் நவ்தீப் சைனி வீரர்களின் நெஞ்சை குறி வைத்து பந்தை வீசினார்.

மீண்டும்

மீண்டும்

அப்போதே நவ்தீப் சைனியை கோலி கண்டித்து இருந்தார். ஆனால் நவ்தீப் சைனி மாறவில்லை. அதற்கு பின் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோல் நவ்தீப் சைனி இதேபோல் செயல்பட்டார். ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியாவை நோக்கி இதேபோல் நவ்தீப் சைனி பந்தை வீசினார். நெஞ்சை குறி பார்த்து இதேபோல் அவர் பந்தை வீசி எறிந்தார்.

விழுந்தார்

விழுந்தார்

அப்போது பந்து அடித்த அதிர்ச்சியில் ராகுல் திவாதியா கீழே விழுந்து துடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் இவர் நெஞ்சை குறி பார்த்து பந்து வீசி உள்ளார். இவரின் இந்த செயல் கடமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இவருக்கு எதிராக பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

கோலி சொல்லியும் இவர் கேட்கவில்லை. இவரை ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்க வேண்டும். வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். விக்கெட் முக்கியம் இல்லை. ஆர்சிபி அணி நிர்வாகம் உடனே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, October 6, 2020, 12:39 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+