Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றிவிட்டார்.. களத்தில் பிடிவாதமாக நின்ற சாம் கரன்.. கோலி சொன்ன அந்த வார்த்தை.. பரபர சம்பவம்!

துபாய்: நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நேற்று பெங்களூருக்கு எதிராக துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் நன்றாக பவுலிங் செய்த சிஎஸ்கே பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிஎஸ்கேவின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.

நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் மொத்தம் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் சாம் கரன் இந்த சீசனில் சிறப்பாக ஆடி வருகிறார். பிராவோவிற்கு மாற்றாக வந்த சாம் தற்போது சிஎஸ்கேவில் நிரந்தர வீரராக மாறி உள்ளார். கடந்த 6 போட்டிகளாக சிறப்பாக பந்து வீசியவர்.. நேற்றய போட்டியில் மிக மோசமாக பவுலிங் செய்தார்.

நேற்று பவுலிங்

நேற்று பவுலிங்

நேற்று போட்டியில் 4 ஓவர் போட்ட சாம் கரன் 48 ரன்கள் கொடுத்தார். இதில் 5 எக்ஸ்டரா வேறு கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கொடுக்கவில்லை. ஓவருக்கு சராசரியாக இவர் 12 ரன்கள் கொடுத்ததுதான் பெங்களூர் அதிக ஸ்கோர் குவிக்கவும் காரணமாக அமைந்தது.

மோசம்

மோசம்

இந்த நிலையில் நேற்று சாம் கரன் சரியாக பேட்டிங்கும் செய்யவில்லை. நேற்று ராயுடு அவுட் ஆன பின் சாம் கரன் பேட்டிங் செய்ய வந்தார். கடந்த சில போட்டிகளாக பேட்டிங் செய்த இவர் சரியாக ஷாட் அடிக்க முடியாமல் திணறினார். நேற்று நடந்த போட்டியிலும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியே சென்றார். ஒரே ஒரு பந்தை சந்தித்தவர் டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஷார்ட் பால்

ஷார்ட் பால்

கிறிஸ் மோரிஸ் போட்ட ஷார்ட் பந்தை சாம் கரன் சுற்றினார். ஆனால் இந்த பந்து பேட்டில் பட்டு, கீப்பர் கைக்கு சென்றது. சின்ன குழந்தை கூட இதை பார்த்தால் விக்கெட் என்று சொல்லிவிடும். பந்து பட்ட சத்தமும் கேட்டது. அதேபோல் பேட்டில் பந்து பட்ட பின், பந்து திசை மாறியதும் தெளிவாக தெரிந்தது. ஆனால் நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.

சாம் கரன்

சாம் கரன்

சாம் கரனும் இதுதான் வாய்ப்பு என்று களத்திலேயே நின்றுவிட்டார். அவருக்கு தான் விக்கெட் என்ற நினைப்பு இருந்தது. ஆனாலும் இவர் களத்திலேயே நின்றார். அதன்பின் கோலி ரிவ்யூ கேட்டார். இந்த ரிவ்யூவில் சாம் கரன் விக்கெட் என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் மூன்றாவது நடுவர் சாம் கரனுக்கு விக்கெட் கொடுத்தார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

தான் விக்கெட் என்று தெரிந்தும் சாம் கரன் இப்படி களத்தில் நின்றது பெரிய அளவில் சர்ச்சையையானது. களத்தில் ஏமாற்ற பார்க்கிறார் என்று சாம் கரனை சிஎஸ்கே ரசிகர்களே கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். சாம் கரனை சுட்டி பையன் என்று நினைத்தால் இப்படி வெட்டி பையனாக இருக்கிறாரே என்று பலரும் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.

கிண்டல்

கிண்டல்

நேற்று கோலியும் சாம் கரனை கிண்டலாக பேசினார். ஆம் சாம் கரன் விக்கெட் என்று தெரிந்ததும் கோலி அவரை கிண்டல் செய்வது போல ஏதோ கூறினார். கோலி செய்த சைகை களத்தில் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 6, 2022, 18:56 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+