Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கடைசி சீட்டிற்கு சென்று விட்டார்.. சிஎஸ்கேவில் நடந்த மாற்றம்.. மஞ்சிரேக்கர் சொன்ன காரணம்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது கேப்டன் தோனி தற்போது பேட்டிங் பிடிப்பதில் கடைசி சீட்டிற்கு சென்று இருக்கிறார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்கும், ராஜாஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்க உள்ளது. இந்த தொடரின் முக்கியமான போட்டியாக இந்த போட்டி பார்க்கப்பட நிறைய காரணங்கள் உள்ளது.

சென்னை அணி மும்பைக்கு எதிராக முதல் வெற்றியை கடந்த சனிக்கிழமை பதிவு செய்தது.இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை சென்னை எதிர்கொள்கிறது

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

இந்த நிலையில் சென்னையில் தோனியின் பேட்டிங் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மும்பைக்கு எதிராக சென்னை அணி முதல் போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையின் ஆட்டத்தை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சென்னை அணி பிட்சை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. மும்பைக்கு எதிராக சென்னையின் பவுலிங்தான் கை கொடுத்தது.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

இந்த போட்டியில் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கினார். தோனி கடைசி நேரத்தில் வருவது முக்கியமான விஷயம் ஒன்றை காட்டுகிறது. அவர் அணியில் முக்கியமான வீரர்களை அவர் தனக்கு முன்பாக களமிறக்கி உள்ளார். அவர் தனக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய விருப்பம் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.

இளைஞர்கள் எப்படி

இளைஞர்கள் எப்படி

தனக்கு முன்பாக அவர் இளைஞர்களை களமிறக்கி உள்ளார். இதனால் அவர்களை மோசமான நேரங்களில் களமிறங்க பயிற்சி அளிக்கிறார். பிரஷர் அதிகம் இருக்கும் நேரங்களில் இறங்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

கேப்டன் ரோல்

கேப்டன் ரோல்

தோனி இதனால் கேப்டன் ரோல் மட்டுமே பார்க்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன். தோனி தற்போது இருக்கும் பார்மிற்கு அவர் எடுத்து முடிவு சரியானது. தோனி என்ற பேட்ஸ்மேன் தற்போது கடைசி சீட்டிற்கு சென்று இருக்கிறார். இதன் மூலம் தோனி என்ற கேப்டன் தற்போது முதல் சீட்டிற்கு வந்து இருக்கிறார், என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 22, 2020, 18:43 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+