அவர்கள் செய்த தப்பு.. கோலி என்ன செய்ய முடியும்?.. மஞ்சிரேக்கர் சொன்ன பரபரப்பு தகவல்.. பின்னணி
துபாய்: பெங்களூர் அணியின் மோசமான தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார்.
2020 ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணி வெளியேறி உள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த பெங்களூர் அணி.. கடைசி கட்டத்தில் மோசமாக சொதப்பி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
வரிசையாக 5 போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. பெங்களூர் அணியின் தொடர் தோல்வியால், கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கோலி நீக்கம்
இந்த நிலையில் பெங்களூர் அணியின் மோசமான தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார். அதில், பெங்களூர் அணியின் தொடர் தோல்விக்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. கோலியை கேப்டனாக நியமித்த அணி நிர்வாகம்தான் இதற்கு காரணம். அணி நிர்வாகம் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை
அணி நிர்வாகம் இதுவரை அணியின் கேப்டனை மாற்றவில்லை. 8 சீசனாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பே கேப்டனை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டேன். அணியில் இருக்கும் நிர்வாகிகளை மட்டும் மாற்றினால்.. எந்த பலனும் அளிக்காது.

ஏன் இல்லை
கோலி தானாக தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். நான் பதவி விலகுகிறேன் என்று அவர் தானாக வந்து சொல்ல மாட்டார். அணி நிர்வாகம்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் அதை அணி நிர்வாகம் செய்ய தயங்குகிறது.

தயக்கம்
நிலைமை இப்படி இருக்கும் போது கோலி மீது குற்றச்சாட்டு வைக்க கூடாது. தோல்விகளை அந்த அணி நிர்வாகம் ஆராய வில்லை. இதுவே பெங்களூர் அணி நிர்வாகத்திற்கு கடைசி பாடமாக இருக்கட்டும். இதை பாடமாக எடுத்துக் கொண்டு பெங்களூர் அணி நிர்வாகம் உறுதியாக முடிவுகளை எடுக்க வேண்டும், என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications