Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை வருட காத்திருப்பு.. திடீரென கதவை தட்டிய வாய்ப்பு.. என்ன நடந்தது? தோனிக்கு மாற்று இவரா?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக கலக்கி வந்த சஞ்சு சாம்சன் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்று உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் இந்திய அணியில் நிறைய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆஸ்திரேலியா இடையே ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த அணியில் தற்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இந்திய அணியில் தற்போது சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். இவருக்கு டி 20 அணியில் ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக இவர் தேர்வாகி உள்ளார்.

ராகுல்

ராகுல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே. எல் ராகுல் இருப்பார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கி உள்ளார். கே. எல் ராகுல் நன்றாக பீல்டிங்கும் செய்வார் என்பதால்.. அவரை பீல்டிங் அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சன் கீப்பிங் செய்ய வாய்ப்புள்ளது.

கூடுதல் பேட்டிங்

கூடுதல் பேட்டிங்

இதனால் இந்திய அணியில் கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் இருக்கும் என்கிறார்கள். தவான், கே. எல் ராகுல் ஓப்பனிங் இறங்கினால், அதன்பின் கோலி, மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. கூடுதல் பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆப்ஷன் காரணமாக இவர் உள்ளே வந்துள்ளார்.

மாற்று

மாற்று

பல வருடமாக இந்திய அணியில் இவர் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிய நிலையில் தற்போது அணிக்குள் வந்துள்ளார். தோனி இல்லாத சமயத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு பண்ட் , தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தோனிக்கு மாற்று வீரர்

தோனிக்கு மாற்று வீரர்

இதனால் தோனிக்கு இவர் மாற்று வீரராக வருவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக ஆடினார். இவரின் ஆட்டத்தை பார்த்து வியந்து போன இந்திய அணி இவருக்கு வாய்ப்பு

வழங்கி உள்ளது. பல நாள் காத்திருப்பிற்கு பின் கிடைத்து இருக்கும் வாய்ப்பை இவர் எப்படி பயன்படுத்துவார் என்று பார்க்கலாம்.

Story first published: Monday, November 9, 2020, 20:52 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+