Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே தலைகீழாக மாறுகிறது.. ஐபிஎல்லில் மீண்டும் நடக்கும் அந்த அதிசயம்.. வச்சு செய்ய போகும் சிஎஸ்கே!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் இந்த சீசனை வெற்றியோடு தொடங்கிய சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் என்று வரிசையாக சின்ன சின்ன அணிகளிடம் எல்லாம் சிஎஸ்கே மோசமாக அடி வாங்கியது. சிஎஸ்கே விளையாடிய முதல் 7 போட்டிகளில் 5ல் படுதோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இதனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சிஎஸ்கே களமிறங்கியது. இரண்டாம் பாதியின் முதல் போட்டியே ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே களமிறங்கியது. இந்த போட்டியில் ஹைதராபாத்தை அடித்து துவைத்து சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் சிஎஸ்கே பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் அதிரடி காட்டி வந்த பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் கடுமையாக சொதப்ப தொடங்கி உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் மொத்தமாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி தலை கீழாக மாற தொடங்கி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

முதல் பாதியில் அதிரடியாக ஆடிய அணிகள் எல்லாம் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே சொதப்ப தொடங்கி உள்ளது. நன்றாக ஆடி வந்த ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியை தோல்வியோடு தொடங்கி உள்ளது. மூன்று அணிகளும் இரண்டாம் பாதியின் முதல் போட்டியில் (8வது மேட்ச்) சொதப்பி உள்ளது.

தோல்வி

தோல்வி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த அணிகளின் வீக்னஸ் என்ன என்று வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்டது. ராஜஸ்தான், பெங்களூர், ஹைதராபாத் எந்த இடத்தில் சொதப்புகிறது என்று வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்டது. இந்த அணிகள்தான் சிஎஸ்கே பிளே ஆப் செல்ல இப்போது இடைஞ்சலாக உள்ளது. இதனால் இந்த அணிகளை வீழத்தி சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. சிஎஸ்கே இன்னும் 6 போட்டிகளில் ஆட வேண்டும்.

குறைந்தது எத்தனை

குறைந்தது எத்தனை

அதில் குறைந்தது 5 போட்டிகளில் சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றிபெற்றால் போதும் பிளே ஆப் சென்று விட முடியும். இதில் பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான் அணிகளை மட்டும் குறி வைத்து வீழ்த்தினால் போதும் கடைசியில் டெல்லி அல்லது மும்பையில் ஒரு அணியை வீழ்த்தி பிளே ஆப் சென்றுவிட முடியும். பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான் அணிகளின் வீக்னஸ் தெரிந்துவிட்டதால் சிஎஸ்கேவால் இந்த மாயத்தை செய்ய முடியும்.

ஸ்பின்

ஸ்பின்

அதேபோல் சிஎஸ்கேவிற்கு இன்னொரு விஷயமும் கைகூடி வந்துள்ளது. அமீரகத்தில் இருக்கும் மைதானங்கள் ஸ்பின் பவுலிங் செய்வதற்கு ஏற்ற மைதானங்களாக மாறி வருகிறது.மைதானம் மிகவும் வறண்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் சிஎஸ்கே தனது சேப்பாக்கம் மேஜிக்கை அமீரகத்தில் நிகழ்த்த முடியும். கொல்கத்தா, டெல்லி போன்ற அணிகளில் முக்கியமான வீரர்கள் பல்வேறு காரணங்களால் விளையாட முடியாமல் தவிப்பதும் கூட சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

அதிசயம் நடக்குமா?

அதிசயம் நடக்குமா?

2010 ஐபிஎல் தொடரில் இதேபோல்தான் முதல் பாதி ஆட்டங்களில் சிஎஸ்கே மோசமாக திணறியது. அதன்பின் இரண்டாம் பாதியில் மீண்டு வந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்று. பிளே ஆப் சென்றது. அதே சீசனில் சிஎஸ்கே கோப்பையும் வென்றது. தற்போது அதேபோல் ஒரு அதிசயம் மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது .

Story first published: Friday, October 16, 2020, 20:35 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+