Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்? பரபரப்பு

துபாய்: இந்திய அணியில் ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு கிடைக்காது என தனக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நேற்று முதல்நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தோனிக்கு மாற்று யார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், கே . எல் ராகுல் அந்த இடத்தை பிடித்து உள்ளார்.

ரிஷாப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் கே. எல் ராகுல் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் கீப்பராக தேர்வாகி உள்ளார்.

எப்படி

எப்படி

அதோடு ராகுல் தற்போது துணை கேப்டனாகவும் தேர்வாகி உள்ளார். இந்திய அணியில் டெஸ்ட் அணிக்கு மட்டுமே ரிஷாப் பண்ட் தேர்வாகி உள்ளார். ஆனால் அதிலும் ரிஷாப் பண்ட் மாற்று வீரராகவே இருப்பார், சாகாதான் கீப்பராக இருப்பார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில், இந்திய அணியில் ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு கிடைக்காது என தனக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

சேவாக் தனது பேட்டியில், ரிஷாப் பண்ட் இந்திய அணியில் எடுக்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை. கடந்த இந்திய தொடரில் ரிஷாப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். ஆனாலும் அவர் பிட்டாக இல்லை. இதனால் கே. எல் ராகுல் தான் அணியில் இருந்தார். பிளெயிங் லெவனில் ரிஷாப் பண்ட் இடம்பெறவில்லை.

கே. எல் ராகுல்

கே. எல் ராகுல்

ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். சரியாக அவர் கீப்பிங் செய்தார். பேட்டிங்கும் நன்றாக செய்தார். ரிஷாப் பண்ட் அப்படி இல்லை. இது அவருக்கு அனுப்பப்பட்ட மெசேஜ். ரிஷாப் பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டும். அவர் போட்டியை பினிஷ் செய்வது இல்லை.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

விக்கெட்டை எளிதாக இழந்து விடுகிறார். அவர் மோசமாக விக்கெட் ஆகாமல் இருந்தால் அணியில் எடுக்கப்பட்டு இருப்பார். அவர் கொஞ்சம் பொறுப்பாக ஆட வேண்டும். தோனிக்கு முன் அணியில் சிறப்பாக விக்கெட் கீப்பர் யாரும் கிடையாது. ரிஷாப் பண்ட் தற்போது தோனியை போல நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார்.

ஆனால் பொறுப்பு இல்லை

ஆனால் பொறுப்பு இல்லை

ஆனால் ரிஷாப் பண்ட் பொறுப்பாக பேட்டிங் செய்வது இல்லை. கோலி, ரவி சாஸ்திரி இருவரும் கண்டிப்பாக ரிஷாப் பண்ட் ஆட்டத்தை விரும்பி இருக்க மாட்டார்கள். அவர்தான் மாற வேண்டும். அவர்தான் விக்கெட்டை இழக்காமல் பொறுப்பாக ஆட வேண்டும். அவர்தான் திறமையை நிரூபிக்க வேண்டும், என்று சேவாக் கடுமையாக பேசி உள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

சேவாக்கின் பேச்சை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். தொடக்க காலத்திலும் சேவாக்கும் இப்படிதான் அதிரடி ஷாட் அடிக்கிறேன் என்று விக்கெட்டுகளை பறிகொடுத்தார். அவர் போய் ரிஷாப் பண்ட்டிற்கு அறிவுரை கூறலாமா? ஓய்வு பெற்றுவிட்டால் யாருக்காவது அறிவுரையை வழங்க வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Wednesday, October 28, 2020, 15:05 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+