Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உட்கார்ந்து பேச நான் ரெடி.. கேள்வி மேல் கேள்வி கேட்ட ஷாருக்.. சிக்கலில் தினேஷ் கார்த்திக்.. பின்னணி!

துபாய்: கொல்கத்தா அணி நேற்று நடந்த ஐபிஎல் போட்டியிலும் தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது கேப்டன் தினேஷ் கார்த்திக் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

2020 ஐபிஎல் தொடரில் மிக வலிமையான வீரர்களை கொண்டு இருக்கும் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இளமையான வீரர்கள், ரசல், இயான் மோர்கன் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்தும் தொடர்ந்து கொல்கத்தா தோல்வி அடைந்து வருகிறது.

மொத்தம் 4 போட்டிகள் ஆடிய கொல்கத்தா அணி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கொல்கத்தாவின் தோல்விக்கு மோசமான கேப்டன்சிதான் காரணமாக பார்க்கப்டுகிறது.

கேப்டன்சி

கேப்டன்சி

கொல்கத்தாவிடம் மிக சிறப்பான அணி இருக்கிறது. நல்ல பவுலர்கள் இருக்கிறார்கள். சிறப்பான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் அதிரடியாக ஆட ரசல், இயான் மோர்கன் போன்ற வீரர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் கூட கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது. இதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக்தான் என்று கூறுகிறார்கள்.

தவறான முடிவு

தவறான முடிவு

களத்தின் கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுக்கும் தவறான முடிவுகள்தான் தோல்விக்கு காரணம் என்கிறார்கள். உதாரணமாக தொடர்ந்து சுனில் நரேன் போன்ற வீரரை ஓப்பனிங் இறக்குவது. இயான் மோர்கனை 5 வது இடத்திற்கு பின் பேட்டிங் செய்ய அனுப்புவது. அணியில் முக்கியமான பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது என்று நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தாவின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் காரணங்களை அடுக்கி இருந்தார். அதில், எங்கள் அணியில் வீரர்கள் கடைசி வரை போராடினார்கள். அதுதான் எங்கள் அணியின் குணம். இன்று வீரர்களை விளையாடியதை பாராட்டுகிறேன். 10-13 ஓவர்களுக்கு இடையில் நாங்கள் கொஞ்சம் பவுண்டரி அடித்திருந்தால் வெற்றிபெற்று இருக்கலாம்.

சிக்ஸர்

சிக்ஸர்

இரண்டு, மூன்று சிக்ஸ் கூடுதலாக அடித்து இருந்தால் வென்று இருப்போம். எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ரஸல் விரைவில் மீண்டு வருவார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவருக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அவர் விரைவில் இந்த தொடரில் செட் ஆன பின் அதிரடியாக ஆட தொடங்குவார் என்று நம்பிக்கை உள்ளது.

ஓப்பனிங் மாற்றம்

ஓப்பனிங் மாற்றம்

ஓப்பனிங் வீரர்களை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். அடுத்த போட்டிக்கு முன் முக்கியமான மாற்றங்களை அணியில் செய்ய வேண்டும். அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உடன் உட்கார்ந்து பேச நான் தயார். அவர்களுடன் ஆலோசனை செய்து சரியான முடிவுகளை எடுக்க நான் தயாராக இருக்கிறேன் , என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக் கான்

ஷாருக் கான்

ஆனால் தினேஷ் கார்த்திக்கின் விளக்கம் மீது ஷாருக் கானுக்கு திருப்தி இல்லை என்று கூறுகிறார்கள். தினேஷ் கார்த்திக் தனது தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் அவர் பொறுப்பு ஏற்பது இல்லை. கேப்டனாக அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை.அதேபோல் சரியாக பேட்டிங்கும் செய்வது இல்லை. இதனால் அவர் மீது மொத்தமாக ஷாருக் கான் நம்பிக்கை இழந்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

கேள்வி

கேள்வி

அதேபோல் அணியில் இயான் மோர்கன் இருக்கிறார் என்பதால் அவரை கேப்டனாக நியமிக்க ஷாருக் கான் ஆலோசனை செய்து வருகிறார். தினேஷ் கார்த்திக்கிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஷாருக் கான் விளக்கம் கேட்டு உள்ளார். தினேஷ் கார்த்திக் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது ஷாருக்கான் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, October 4, 2020, 10:18 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+