Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை விட்டு செல்லும் முன் வாட்சன் சொன்ன அந்த விஷயம்.. மனுஷன் எப்பவும் கெத்துதான்.. நின்னுட்டார்

துபாய்: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் வாட்சன் சிஎஸ்கே அணி குறித்தும், இளம் வீரர் ரூத்துராஜ் குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் வாட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிஎஸ்கே அணிக்காக ஓப்பனிங் வீரராக ஆடி வந்த இவர் இன்று தனது ஓய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த சீசனில் இவர் சரியாக ஆடாத நிலையில் தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

வணக்கம்

வணக்கம்

தனது ஓய்வை குறித்து வாட்சன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,மஞ்சள் ஆர்மிக்கு வணக்கம்.. உங்கள் எல்லோரிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வருடம் நான் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஆட்டம்தான்.. கடைசி ஆட்டம். மொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

உருக்கம்

உருக்கம்

இது மிகவும் உருக்கமான நேரம். நான் இந்த கிரிக்கெட்டை மிகவும் காதலிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் நன்றி.கடந்த மூன்று வருடம் சிறப்பாக இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. எதாவது ஒரு வகையில் அணியுடன் இணைந்து இருக்க விரும்புகிறேன். சிஎஸ்கே அணிக்காக கடந்த மூன்று வருடம் ஆடியது பெருமை அளிக்கிறது.

சந்தோசம்

சந்தோசம்

என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடர் சிஎஸ்கே அணியுடன் அமைந்தது சந்தோசம் அளிக்கிறது. உங்களின் அன்புக்கு நான் போதுமான அளவு கிரிக்கெட்டை பதிலாக கொடுத்து இருக்கிறேன் என்று நம்புகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.. உங்களுடன் இணைந்து இருப்பேன், என்று வாட்சன் உருக்கமாக அறிவித்துள்ளார்.

ரூத்துராஜ்

ரூத்துராஜ்

சிஎஸ்கே அணியில் இருந்து வாட்சன் விலகி உள்ள நிலையில் அவரின் இடத்தில் அடுத்த வருடம் ரூத்துராஜ் ஆட உள்ளார். இந்த நிலையில் ரூத்துராஜ் குறித்து வாட்சன் புகழ்ந்து பேசி உள்ளார். ரூத்துராஜ் சிறப்பாக ஆடுகிறார். களத்தில் ரூத்துராஜ் மிகவும் அமைதியாக இருக்கிறார். டென்ஷன் ஆவது இல்லை.

விருப்பம்

விருப்பம்

சிஎஸ்கே ரசிகர்களும் இவரை விரும்ப தொடங்கி உள்ளனர். அவர் மிகவும் இளம் வீரர். சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஒருவர் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார், என்று வாட்சன் புகழ்ந்து உள்ளார். தன்னுடைய இடத்தை நிரப்ப போகும் வீரரை வாட்சன் புகழ்ந்து பாராட்டி உள்ளார். வாட்சனின் இந்த குணம்.. அணியை விட்டு செல்லும் முன் அவர் இப்படி பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Tuesday, November 3, 2020, 14:18 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+