இவர் வந்தால் போதும்.. மேட்சே மாறிவிடும்.. அசந்து போன தோனி.. சிஎஸ்கேவில் உருவெடுத்த கேம் - சேஞ்சர்!
துபாய்: சிஎஸ்கே அணியில் யாருமே எதிர்பார்க்காத கேம் சேஞ்சர் ஒருவர் உருவெடுத்து உள்ளார்.
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தொடர் தோல்விகளை தொடர்ந்து இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் சிஎஸ்கே களமிறங்கியது. இதனால் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே தனது அதிரடி பவுலிங் மூலம் பெங்களூர் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தியது.

பவுலிங்
இன்று சிஎஸ்கே அணிக்கு கேம் சேஞ்சராக இருந்தவர் என்று பார்த்தால் அது சரத்துல் தாக்கூர்தான். முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணியில் பின்ச் அவுட்டான பின் கோலி மற்றும் படிக்கல் பேட்டிங் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி காட்ட தொடங்கினார்கள். கோலி - படிக்கல் இருவரும் 10 ஓவர் வரை அவுட்டாகாமல் பார்ட்னர்ஷிப் அமைக்க தொடங்கினார்கள். இதனால் 10 ஓவர்களுக்கு பின் இருவரும் அதிரடியாக ஆட சூழ்நிலை உருவாகி வந்தது.

ஆனால் என்ன
ஆனால் அப்போதுதான் 11வது ஓவரை வீச சரத்துல் தாக்கூர் களத்திற்கு வந்தார். அவர் வந்த இரண்டாவது பந்திலேயே அதிரடி காட்டினார். இரண்டாவது பந்திலேயே படிக்கல் விக்கெட்டை எடுத்தார். அதற்கு முதல் ஓவரில்தான் படிக்கல் சிக்ஸர் அடித்து இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது பந்திலேயே படிக்கல் விக்கெட்டை சரத்துல் தாக்கூர் எடுத்தார்.

மீண்டும் என்ன செய்தார்
படிக்கல் அவுட் ஆன பின் டி வில்லியர்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் சரத்துல் தாக்கூர் அவரையும் விட்டுவைக்கவில்லை.அதே ஓவரில் சரத்துல் தாக்கூர் போட்ட 5வது பந்தில் டி வில்லியர்ஸ் அவுட்டானார். பெங்களூரின் இரண்டு முக்கியமான வீரர்கள் ஒரே ஓவரில் சரத்துல் தாக்கூர் போட்ட பந்தில் அவுட்டானார்கள். இதனால் பெங்களூரின் டாப் ஆர்டர் மொத்தமாக நிலைகுலைந்தது.

சரத்துல் தாக்கூர்
சரத்துல் தாக்கூர் பெங்களூருக்கு எதிராக மட்டும் இப்படி ஆடவில்லை. இதற்கு முன் இவர் ஆடிய இரண்டு போட்டியிலும் சிறப்பாகவே பவுலிங் செய்தார். முதலில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான நான்கு ஓவர்களை வீசினார். அதேபோல் அதற்கு பின் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியிலும் சரத்துல் தாக்கூர் ஓவர்தான் முக்கியமான ஓவராக இருந்தது.

சராசரி
அதேபோல் இவர் 4 ஓவர்களில் 30 ரன்களுக்கும் அதிகமாக மொத்தமாக கொடுப்பது இல்லை. சராசரியாக 2 விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டியிலும் எடுக்கிறார். இன்று சரத்துல் தாக்கூர் போட்ட ஓவரை பார்த்து தோனியே மிரண்டு போனார். சிஎஸ்கே அணியில் தற்போது மிக சிறப்பான பார்மில் இருக்கும் வீரராக சரத்துல் தாக்கூர் உருவெடுத்து உள்ளார்... இந்த சீசனில் இவர் டாப் விக்கெட் டேக்கராக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications