For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவிற்கு சைலண்டாக உதவிய ரட்சகன்.. நேற்று போட்டியை மாற்றிய கேம்-சேஞ்சர் இவர்தான்..என்ன நடந்தது?

துபாய்: ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் நேற்று சிஎஸ்கே வெற்றிபெறுவதற்கு பவுலர் ஒருவர்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.

Recommended Video

SRH-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் CSKவுக்கு சாதமாக போட்டியை மாற்றிய நபர்

நேற்று சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. 7 போட்டிகளில் 5 போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே நேற்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

சரியான திட்டமிடலுடன் களமிறங்கிய சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. முதலில் ஆடிய சிஎஸ்கே 167 ரன்கள் எடுக்க, அதன்பின் ஆடிய ஹைதராபாத் 147 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

நேற்று சிஎஸ்கே கிட்டத்தட்ட முழுமையான ஆட்டம் ஆடியது என்றுதான் கூற வேண்டும். தொடக்கத்திலேயே சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. ஓப்பனிங் இறங்கிய சாம் கரன் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அதன்பின் வாட்சன் 42, ராயுடு 41 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கடைசியில் தோனி, ஜடேஜா அதிரடியாக ஆடி தங்கள் பங்கிற்கு 21 மற்றும் 25 ரன்கள் எடுத்தனர். இதனால் சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் தொடக்கத்தில் இருந்தே திணறியது. ஹைதராபாத் ஓப்பனர்கள் இருவரும் பவர் பிளேவில் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறினார்கள். அதிலும் டேவிட் வார்னர் விக்கெட்டை சாம் கரன் எடுத்து மொத்தமாக ஆட்டத்தை மாற்றினார்.

எப்படி மாறியது

எப்படி மாறியது

அதன்பின் பிரைஸ்டோ, மனிஷ் பான்டே இருவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய கேன் வில்லியம்சன் பொறுமையாக ஆடி.. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்தார். பிரியம் கார்க், விஜய் சங்கர் இருவரும் பெரிய அளவில் ஸ்ட்ரைக் எடுக்காமல் கேன் வில்லியம்சனுக்கு ஸ்டிரைக் கொடுத்தனர். 16-17 ஓவர் வரை சிஎஸ்கே வசம்தான் ஆட்டம் இருந்தது.

மோசம்

மோசம்

ஆனால் டெத் ஓவர்களில் கரன் சர்மா போட்ட பவுலிங்கை ரஷீத் கான் கிழித்து எடுத்தார். வெறும் 8 பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று இவர் 14 ரன்கள் எடுத்தார். கரன் சர்மா வீசிய 18வது ஓவரில் மட்டும் 19 ரன்கள் சென்றது. இதனால் கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் எடுத்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் ரஷீத் கான் இருந்ததால்.. ஆட்டமே கையைவிட்டு போய்விட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் மாற்றம்

ஆனால் மாற்றம்

ஆனால் 19வது ஓவர் வீசிய சரத்துல் தாக்கூர் மொத்தமாக ஆட்டத்தை மாற்றினார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே சரத்துல் தாக்கூர் கொடுத்தார். பவுண்டரி, சிக்ஸ் எதுவும் செல்லவில்லை. அந்த ஓவரில் ரஷீத் கான் அவுட் ஆனார். இதனால் அந்த ஓவரில் மொத்தமாக ஆட்டம் மாறியது. கையை விட்டு போன ஆட்டத்தை மொத்தமாக மீட்டு சரத்துல் தாக்கூர்தான் மீண்டும் சிஎஸ்கேவை உயிர்பெற வைத்தார்.

ரட்சகன்

ரட்சகன்

நேற்று சரத்துல் தாக்கூர் இரண்டு ஓவர் மட்டுமே வீசினார். இதில் மொத்தமாக 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக இவர் ஆட தொடங்கியதில் இருந்தே சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான விக்கெட்டை எடுத்து கேம் சேஞ்சராக இவர் திகழ்கிறார். ஆர்ப்பாட்டம் இன்று மிகவும் அமைதியாக சிஎஸ்கேவில் ஒரு சூப்பர் ஸ்டார் தற்போது உருவாகி வருகிறார்.

Story first published: Wednesday, October 14, 2020, 21:01 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL 2020: Shardul Thakur playing the game changer role for CSK in every match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+