Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் இருந்தால் போதும்.. சிஎஸ்கேவை தொட கூட முடியாது.. மேட்ச் வின்னரை குறி வைக்கும் தோனி.. செம பின்னணி

துபாய்: டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் ஆடும் அணியில் இம்ரான் தாஹிர் இணைக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இம்ரான் தாஹிரை அணியில் எடுப்பதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது.

2020 ஐபிஎல் சீசன் அமீரகத்தில் நடக்கும் என்று கூறியவுடன் எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர்களை தயார் செய்தன. அக்சர் பட்டேல், அஸ்வின், முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர். சுனில் நரேன் என்று எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் ஸ்பின்னர்களை தயார் செய்தன.

சிஎஸ்கே அணியும் தங்கள் டீமில் இருக்கும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கரன் சர்மா ஆகியோரை தீவிரமாக தயார் செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஹர்பஜன் சிங் அணியில் இருந்து வெளியேறினார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதேபோல் ரெய்னாவும் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் எப்போதும் டு பிளஸிஸை உட்கார வைத்துவிட்டு தாஹிரை களமிறக்கும் தோனி இந்த முறை டு பிளஸிஸை ஓப்பனிங் இறக்கினார். இதனால் சாம் கரன், வாட்சன், பிராவோ,, பிளசிஸ் என்று மொத்தமாக வெளிநாட்டு வீரர்கள் கோட்டா முடிந்தது. இதனால் அணியில் இம்ரான் தாஹிரை களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நிலை ஏற்பட்டது

நிலை ஏற்பட்டது

சிஎஸ்கே அணி இதுவரை 8 ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசனில் விளையாடி உள்ளது. இந்த 8 போட்டிகளில் சிஎஸ்கே ஒரு போட்டியில் கூட இம்ரான் தாஹிரை இறக்க முடியவில்லை . பிராவோ , சாம் கரன், வாட்சன், டு பிளசிஸ் என்று அணியில் யாரையும் நீக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்ரான் தாஹிரை அணியில் எடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது .

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இப்போதுதான் அணியில் தாஹிரை எடுப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு முக்கியமான விஷயங்கள் தாஹிருக்கு ஆதரவாக வந்துள்ளது. முதல் விஷயம் அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள். அமீரகத்தில் இருக்கும் சார்ஜா, துபாய், அபுதாபி என்று எல்லா பிட்ச்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பிட்சாக மாறி வருகிறது. இதனால் இம்ரான் தாஹிர் இங்கு மேஜிக் நிகழ்த்த முடியும்.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் மிகவும் ஸ்லோ பிட்ச் ஆகும். இங்கு தாஹிர் நிகழ்த்திய மேஜிக்கால்தான் சிஎஸ்கே இரண்டு வருடம் இறுதி போட்டிக்கு சென்றது. ஒரு வருடம் கோப்பையை கூட வென்றது. இம்ரான் தாஹிர்தான் இரண்டு வருடமும் சிஎஸ்கேவிற்கு மேட்ச் வின்னராக இருந்தார். இந்த நிலையில் இந்த வருடம் இம்ரான் தாஹிர் மீண்டும் களமிறங்க காலம் கைகூடி வந்துள்ளது.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

பிட்ச் ஸ்பின் பவுலிங் செய்வதற்கு ஏற்றபடி மாறி வருகிறது. இன்னொரு காரணம் என்று குறிப்பிட்டால் பிராவோ பார்மில் இல்லை. பிராவோ தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்வது இல்லை. பவுலிங் மட்டுமே நன்றாக செய்கிறார். இதனால் அவருக்கு பதில் ஜெகதீசனை அணியில் எடுத்துவிட்டு, சாவ்லாவிற்கு பதிலாக இம்ரான் தாஹிரை அணியில் கொண்டு வரலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இந்த மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிஎஸ்கே இதை செய்தால் மொத்தமாக போட்டியே தலைகீழாக மாறும். சிஎஸ்கே மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பும். அணியை யாரும் தொட கூட முடியாது என்கிறார்கள். இவர் இன்று அணியில் எடுக்கப்படுவாரா என்று இதனால் கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 13:04 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+