Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரரையே மதிக்காத சாம்.. எல்லாம் தோனி கொடுத்த தைரியம்.. களத்தில் நடந்த சம்பவம்!

துபாய் : ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கர்ரனை துவக்க வீரராக ஆட வைத்தது.

அவர் அதிரடி ஆட்டம் ஆடவே துவக்க வீரராக அனுப்பப்பட்டார். அவருடன் பாப் டுபிளெசிஸ் துவக்க வீரராக களமிறங்கினார்.

டுபிளெசிஸ் மூன்றாவது ஓவரில் தான் தன் முதல் பந்தை சந்தித்தார். அதில் அவர் டக் அவுட்டும் ஆனார். சாம் கர்ரனால் தான் அவர் டக் அவுட் ஆனார் என விமர்சகர்கள் கூறியதால் பரபரப்பு எழுந்தது.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று மோசமான நிலையில் இருந்தது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் தவித்தது சிஎஸ்கே.

சிஎஸ்கே டாஸ் வெற்றி

சிஎஸ்கே டாஸ் வெற்றி

இந்த சூழ்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கினார் கேப்டன் தோனி. டாஸ் வென்ற அவர் உடனடியாக பேட்டிங் தேர்வு செய்தார். இதுவரை சிஎஸ்கே இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்யாத நிலையில், இது நல்ல மாற்றமாக பார்க்கப்பட்டது.

எதிர்பாராத முடிவு

எதிர்பாராத முடிவு

டாஸ் முடிவை விட எதிர்பாராத முடிவு சாம் கர்ரன் துவக்க வீரராக இறங்கியது தான். இளம் வீரரான அவரை துவக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆட அனுப்பி வைத்தார் கேப்டன் தோனி. விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் ஆடுமாறு அவருக்கு முழு அதிகாரம் அளித்து அனுப்பினார்.

சாம் கர்ரன் என்ன செய்தார்?

சாம் கர்ரன் என்ன செய்தார்?

சாம் கர்ரன் முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது ஓவரிலும் சக துவக்க வீரர் பாப் டுபிளெசிஸ்-க்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அவரே அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் சந்தித்து 7 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்தார் கர்ரன்.

பாப் டுபிளெசிஸ் டக் அவுட்

பாப் டுபிளெசிஸ் டக் அவுட்

இதை அடுத்து மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் தான் பாப் டுபிளெசிஸ்-க்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. சந்தீப் சர்மா அந்த ஓவரை வீசினார். இரண்டு ஓவர்கள் பேட்டிங் ஆட காத்திருந்த டுபிளெசிஸ் முதல் பந்தை கணிக்க முடியாமல் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

டுபிளெசிஸ் முதல் இரண்டு ஓவர்களில் வாய்ப்பே இல்லாததால் ரன் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் டக் அவுட் ஆகி விட்டார் என விமர்சகர்கள் கூறினர். சாம் கர்ரன் தானே முதல் இரண்டு ஓவர்கள் ஆட வேண்டும் என திட்டமிட்டு ஆடியது தான் இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறினர்.

தோனி கொடுத்த தைரியம்

தோனி கொடுத்த தைரியம்

சிஎஸ்கே அணி புதிய முயற்சியை கையில் எடுத்துத் தான் சாம் கர்ரனை துவக்க வீரராக பேட்டிங் ஆட அனுப்பி வைத்தது. கேப்டன் தோனி எப்படி வேண்டுமானாலும் ஆட அனுமதி அளித்துத் தான் அனுப்பி இருப்பார். ஆனால், அதற்காக மூத்த வீரருக்கு அவர் ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியது சிஎஸ்கே அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் அதிக ரன் குவித்த பாப் டுபிளெசிஸ் டக் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சாம் கர்ரன் 4வது ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடி அவர் மட்டும் 21 ரன்கள் சேர்த்தார். 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

Story first published: Tuesday, October 13, 2020, 22:22 [IST]
Other articles published on Oct 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+