Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹா, வார்னர், ரஷித்.. டெல்லி அணியை புரட்டிப் போட்டு மாபெரும் வெற்றி.. வாயை பிளக்க வைத்த ஹைதராபாத்!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி அவசியம் என்ற நிலையில் ஹைதராபாத் அணி நெட் ரன் ரேட்டையும் உயர்த்தும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர்,சாஹா பேட்டிங்கில் ஜொலித்தனர். ரஷித் கான் பந்துவீச்சில் மிரட்டினார்.

ஹைதராபாத் - டெல்லி போட்டி

ஹைதராபாத் - டெல்லி போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளில் முதலில் பந்துவீசும் அணி தான் வெற்றி பெற்று வருகிறது.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

அந்த அடிப்படையில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், நடந்தது வேறு. வார்னர் துவக்கம் முதலே டெல்லி அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களை குறி வைத்து தாக்கி ரன் குவித்து வந்தார். சாஹாவும் அதிரடி ஆட்டம் ஆட டெல்லி நிலை குலைந்தது.

பவர்பிளே

பவர்பிளே

பவர்பிளே ஓவர்களில் மட்டும் ஹைதராபாத் அணி 77 ரன்கள் குவித்தது. வார்னர் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். சாஹா அதிரடி ஆட்டம் ஆடி 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். 12 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார் அவர்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

மனிஷ் பாண்டே 44, கேன் வில்லியம்சன் 11 ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்காக 220 ரன்களை நிர்ணயம் செய்தது ஹைதராபாத் அணி. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை கொடுத்து பரிதாப நிலையில் இருந்தனர்.

டெல்லி அணி திணறல்

டெல்லி அணி திணறல்

டெல்லி அணி சேஸிங்கில் துவக்கதிலேயே தடுமாறியது. ஷிகர் தவான் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5, ஹெட்மயர் 16, ரிஷப் பண்ட் 36, அஜின்க்யா ரஹானே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி ஆல் - அவுட்

டெல்லி ஆல் - அவுட்

ஸ்ரேயாஸ் ஐயர் ஆறாம் வரிசையில் பேட்டிங் இறங்கி 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்வரிசை வீரர்களில் துஷார்பாண்டே மட்டும் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணியை முந்தி ஆறாம் இடத்துக்கு சென்றது ஹைதராபாத் அணி. டெல்லி அணி அடுத்தடுத்து இரண்டு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

Story first published: Tuesday, October 27, 2020, 23:45 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+