Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமில் எடுக்காத வலி.. டெஸ்ட் வீரர் முத்திரை.. வார்னர் கண்முன் அதிரடி ஆட்டம்.. செம பதிலடி தந்த வீரர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் அசத்தல் ஆட்டம் ஆடியது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 219 ரன்கள் குவித்தது. இதில் விரிதிமான் சாஹா மட்டுமே 87 ரன்கள் குவித்து இருந்தார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் வாய்ப்பு கிடைத்த உடன் தன் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் கேப்டனை மிரள வைத்தார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

சாஹா இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ள வீரர். அதுவும் கூட நிரந்தரமில்லை. ஹைதராபாத் அணியில் சாஹாவுக்கு எப்போதும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளித்தார் வார்னர்.

வார்னர் கண் முன்..

வார்னர் கண் முன்..

டெஸ்ட் வீரர் என முத்திரை குத்தப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த அவர், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடினார். துவக்க வீரராக வார்னருடன் களமிறங்கி ஆடிய அவர் வார்னருக்கு இணையாக அதிரடி ஆட்டம் ஆடி ஹைதராபாத் அணியை 200 ரன்கள் கடக்கச் செய்தார்.

பவுண்டரி மழை

பவுண்டரி மழை

சாஹா இந்தப் போட்டியில் பவுண்டரி அடித்துத் தள்ளினார். 12 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார். விக்கெட்டையும் காப்பாற்றிக் கொண்டே அதிரடியாக ரன்னும் சேர்த்தார் சாஹா. டேவிட் வார்னர் 66 ரன்கள் எடுத்த நிலையில்,193 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய சாஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. வார்னர் - சாஹா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது. சாஹா, வார்னர் கண்முன் தன்னை அணியில் சேர்க்காத ஆதங்கத்தை அதிரடி ஆட்டம் மூலம் காட்டியதே இந்த ஸ்கோருக்கு முக்கிய காரணம்.

டெல்லி படுதோல்வி

டெல்லி படுதோல்வி

டெல்லி அணி இந்தப் போட்டியில் சேஸிங்கில் மோசமாக திணறியது. ஷிகர் தவான் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். டெல்லி அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் இமாலய வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, October 28, 2020, 0:02 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+