Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போராடிய பொல்லார்டு.. அதிர வைத்த வார்னர் டீம்.. 8 விக்கெட் காலி.. ரோஹித் இருந்தும் திணறிய மும்பை!

ஷார்ஜா : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தங்கள் பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தியது.

சிறிய பவுண்டரி எல்லை கொண்ட ஷார்ஜாவில் நடந்த போட்டி என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ரோஹித் சர்மா வருகை

ரோஹித் சர்மா வருகை

ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் அணிக்கு திரும்பினார். அதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஹைதராபாத் நிலை

ஹைதராபாத் நிலை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாக இருந்தது, இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறும்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

இந்த நிலையில், போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாறியது. கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். டி காக் 25, இஷான் கிஷன் 33, சூர்யகுமார் யாதவ் 36 ரன்கள் எடுத்தனர்.

பொல்லார்டு அதிரடி

பொல்லார்டு அதிரடி

தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் கீரான் பொல்லார்டு மட்டுமே போராடி 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. சந்தீப் சர்மா 3 விக்கெட் சாய்த்தார். ஜேசன் ஹோல்டர் 2, ஷாபாஸ் நதீம் 2, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். நதீம் மிகவும் குறைவாக 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

Story first published: Tuesday, November 3, 2020, 22:23 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+