Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிசிசிஐக்கு செம ஷாக்.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா!

அபுதாபி : ரோஹித் சர்மா கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு இன்னும் தயாராகவில்லை என பிசிசிஐ கூறி வந்த நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலேயே மும்பை அணிக்கு திரும்பி உள்ளார்.

இது யாருமே எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. டிசம்பரில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் கூட ரோஹித் சர்மாவால் ஆட முடியாது என தேர்வுக் குழு கூறி வந்த நிலையில், ரோஹித் சர்மா தான் போட்டியில் ஆட தயாராக இருப்பதாகக் கூறி தெறிக்கவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பாதியில் காயமடைந்தார். அவருக்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. அவருக்கு பிசிசிஐ மருத்துவக் குழு மற்றும் மும்பை இந்தியன்ஸ் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது.

ஐபிஎல் போட்டிகளில் ஆடவில்லை

ஐபிஎல் போட்டிகளில் ஆடவில்லை

அவர் காயத்திற்குப் பின் லீக் சுற்றில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அவரது காயம் லீக் சுற்றின் முடிவுக்குள் குணமாகி விடும் என்றும், அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி கூறி இருந்தது.

ஆஸ்திரேலிய தொடரில் நீக்கம்

ஆஸ்திரேலிய தொடரில் நீக்கம்

இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் ரோஹித் சர்மா பெயரை சேர்க்கவில்லை பிசிசிஐ. அவருக்கு காயம் இருப்பதால் அவரை சேர்க்கவில்லை என தேர்வுக் குழு காரணம் கூறியது.

கடும் சர்ச்சை

கடும் சர்ச்சை

ரோஹித் சர்மாவுக்கு காயம் மோசமாக இருக்கிறதா? என்ற கேள்வியே அதன் பின் தான் எழுந்தது. அணியில் தேர்வு செய்யாத அடுத்த சில நிமிடங்களில் ரோஹித் சர்மா வலைப்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஆனது.

ஆடவே முடியாது

ஆடவே முடியாது

ஆனாலும், பிசிசிஐ அவரை தாங்கள் தேர்வு செய்யாமல் போனதற்கு அவரது காயம் தான் காரணம், அவரால் பேட்டிங் செய்ய முடியும். ஆனால், ஓட முடியாது என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி தங்கள் தரப்பை நியாயப்படுத்தி வந்தது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது பற்றி பேசுகையில், ரோஹித் சர்மாவால் போட்டிகளில் அத்தனை எளிதில் பங்கேற்க முடியாது என மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

திருப்பம்

திருப்பம்

இந்த நிலையில், அதிரடியாக ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்றார். இது யாரும் எதிர்பாராத திருப்பமாக இருந்தது. தான் உடற்தகுதியுடன் இருப்பதாக எண்ணுவதாக ரோஹித் இந்தப் போட்டிக்கு முன் கூறினார்.

ஹைதராபாத் - மும்பை போட்டி

ஹைதராபாத் - மும்பை போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 3, 2020, 20:14 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+