Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை விட சிறந்த பவுலர்.. ஆனா யாருமே கண்டு கொள்ளவில்லை.. வெளியான தகவல்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்!

ஷார்ஜா : பும்ரா தான் இன்று கிரிக்கெட் உலகின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கிறார்.

அவருடன் போட்டி போட்டு பல வேகப் பந்துவீச்சாளர்கள் இன்று முன்னேறி வருகின்றனர். ஆனால், இந்திய அளவில் பும்ராவுக்கு இணையாக யாரையும் கூற முடியவில்லை.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா பற்றிய புள்ளி விவரம் ஒன்று இணையத்தை வியக்க வைத்துள்ளது.

சந்தீப் சர்மா

சந்தீப் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடி வருபவர் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா. அவருக்கு சர்வதேச அரங்கில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்று தன் பங்களிப்பை அளித்து வருகிறார்.

வியப்பு

வியப்பு

அவரும் பும்ராவும் 2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியின் முடிவில் சரியாக 90 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ளனர். இதில் பும்ரா 105 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். சந்தீப் சர்மா 108 விக்கெட்கள் சாய்த்துள்ளார். பும்ராவை விட சந்தீப் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருப்பது ரசிகர்களை அவர் மீது கவனம் கொள்ள வைத்துள்ளது.

முன்னணி

முன்னணி

அதே போல, பந்துவீச்சு சராசரியிலும் பும்ராவை விட முன்னணியில் இருக்கிறார். பும்ராவின் சராசரி 24.22. சந்தீப் சர்மாவின் சராசரி 24.02. ஸ்ட்ரைக் ரேட்டிலும் முன்னணியில் இருக்கிறார் பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 19.4. சந்தீப் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 18.6.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

எனினும், நடப்பு ஐபிஎல் தொடரில் பும்ரா அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். பும்ரா 13 போட்டிகளில் 23 விக்கெட்கள் சாய்த்துள்ளார். ஹைதராபாத் வீரர் சந்தீப் சர்மா 11 போட்டிகளில் 13 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

Story first published: Wednesday, November 4, 2020, 22:14 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+