Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs MI : டாஸ் வென்ற வார்னர்.. பும்ரா, போல்ட் நீக்கம்.. ஏமாற்றிய ரோஹித் சர்மா!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

பிளே-ஆஃப்

பிளே-ஆஃப்

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மூன்று அணிகள் மட்டுமே இதுவரை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார்

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார்

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பினார். ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, போல்ட் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதில் ஜேம்ஸ் பாட்டின்சன், தவால் குல்கர்னி சேர்க்கபட்டனர்.

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். சந்தீப் சர்மா அவர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.

Story first published: Tuesday, November 3, 2020, 20:38 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+