Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக களமிறக்கும் ஹைதராபாத்.. சிஎஸ்கேவிற்கு தொடக்கத்திலேயே செக் வைத்த வார்னர்.. தரமான சம்பவம்!

துபாய்: நாளை சென்னைக்கு எதிராக விளையாடும் ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11 குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

நாங்கள் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டோம், மூன்றாவது போட்டியில் தோல்வி அடையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதனால் பவுலிங் தொடர்பான திட்டங்களை மாற்றி இருக்கிறோம்.

பவுலிங் தொடர்பாக புதிய திட்டங்களை வகுத்து உள்ளோம். அது வெற்றிபெற்றால், ஹைதராபாத் வெற்றிபெறும்.. இது டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் அளித்த பேட்டி. அந்த போட்டியில் சொல்லி வைத்ததுபோல் ஹைதராபாத் பவுலிங் தெறி கிளப்பியது.

வெற்றி

வெற்றி

ஹைதராபாத் அணி அந்த போட்டியில் வென்றது. டெல்லிக்கு எதிரான போட்டியில் அன்று ஹைதராபாத் வெற்றிபெற அந்த அணியின் பவுலிங்தான் காரணமாக இருந்தது. இரண்டு போட்டிகளாக பவுலிங் சொதப்பிய நிலையில் அன்றுதான் பவுலிங் பார்மிற்கு திரும்பியது. அதிலும் ஹைதராபாத் அணியின் ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் இரண்டும் பேரும் பார்மிற்கு திரும்பினார்கள் .

வலிமை

வலிமை

இன்னொரு பக்கம் புதிதாக ஹைதராபாத் அணியில் சேர்ந்து இருக்கும் டி நடராஜன் ஐபிஎல் தொடரின் யார்க்கர் கிங்காக உருவெடுத்து உள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் நடராஜனுக்கு உதவும் வகையில் கலீல் அஹமது அவருக்கு பார்மிற்கு திரும்பி வருகிறார். இதனால் ஹைதராபாத் அணியின் பவுலிங் மிக வலிமையாக உள்ளது.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் திரும்பி உள்ளார். இதனால் அணியின்

பேட்டிங் வலிமை அடைந்துள்ளது. மிடில் ஆர்டரில் ஹைதராபாத் திணறிக்கொண்டு இருந்த நிலையில், அவரும் தற்போது அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் ஹைதராபாத் அணி கடந்த இரண்டு போட்டிகள் போல இல்லாமல்.. மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறியுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நிலையில் சென்னைக்கு வந்திருக்கும் கெட்ட செய்தி என்ன என்று பார்த்தால்.. ஹைதராபாத் அணி இதே வீரர்களுடன் நாளை சென்னைக்கு எதிராக விளையாட உள்ளது. பிளேயிங் லெவனில் நாளை எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் பெரும்பாலும் டேவிட் வார்னரின் பவுலிங் திட்டமும் நாளை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சென்னைக்கு சிக்கல்

சென்னைக்கு சிக்கல்

ஹைதராபாத் அணி அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குவதால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்கும் என்று கூறுகிறார்கள். சென்னை அணியின் பேட்டிங் சரி இல்லை. ஹைதராபாத் போன்ற வலுவான பவுலிங்கை எல்லாம் சென்னையால் எதிர்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள்.

ஹைதராபாத் எப்படி

ஹைதராபாத் எப்படி

இந்த நிலையில் ஆடும் ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அப்துல் சமாத் , அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் , கே கலீல் அஹமது , டி நடராஜன் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Thursday, October 1, 2020, 21:13 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+