Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசாகிடுச்சு.. அதிரடியாக ஆட முடியவில்லை.. தோனியை குத்தி காட்டிய பிளமிங்.. இப்படியா பேசுவீங்க?

துபாய்: சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி அளித்துள்ளார்.

2020 ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்து வருகிறது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டிகளிலும் கூட சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்துவிட்டது.

மொத்தம் 7 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மீதம் உள்ள 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி அளித்துள்ளார். சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் சரியாக இல்லை என்றால் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாகி விடுகிறார்கள். சிஎஸ்கே ஓப்பனிங் சொதப்பினால் மொத்தமாக அணியே காலியாகி விடுகிறது. இதற்குதான் தீர்வு காண வேண்டும் . மிடில் ஓவர்களில் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும்.

மிடில் ஓவர்

மிடில் ஓவர்

அதுதான் தற்போது முக்கியம். சிஎஸ்கே அணிக்கு நிறைய பேட்டிங் ஆப்ஷன் இருக்கிறது. தொடக்கத்தை நன்றாக அமைக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக இருப்பதால் கடைசியில் டென்சன் அதிகரிக்கிறது. இதனால் அதிரடியாக ஆடும் வீரர்கள் பாதி போட்டிக்கு பின் இறக்க வேண்டும். அதிரடியாக அவர்கள் கடைசியில் ஆட வேண்டும்.

தீர்வு என்ன

தீர்வு என்ன

இதுதான் இப்போதைக்கு தீர்வு. நாங்கள் இதேபோல் விளையாடினால் பிளே ஆப் செல்வது கூட கடினம்தான். அணியின் தோல்விக்கு சில காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான காரணம் அணியில் இருக்கும் வீரர்கள் வயதாவதுதான் காரணம். அணியில் வீரர்களுக்கு வயதாகிவிட்டது. இதுவும் தோல்விக்கு ஒரு வகையில் காரணம்தான்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

இதனால்தான் கடைசியில் வீரர்கள் அதிரடியாக ஆடுவது இல்லை. சிஎஸ்கே அணியில் எப்போதும் ஸ்பின் பவுலர்கள்தான் நன்றாக ஆடுவார்கள்.இந்த முறை ஸ்பின் பவுலர்கள் சரியாக பவுலிங் செய்தாலும் போதிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நாங்கள் ஆடும் முறையை மாற்ற வேண்டும்.

காரணம் என்ன

காரணம் என்ன

நாங்கள் ஒரே அணியோடு விளையாடி வருகிறோம். தேர்வு முறையில் மாற்றங்களை செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவுகள் எல்லாம் மாற போகிறது. எல்லா போட்டியிலும் நாங்கள் சேசிங் செய்வதும் தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக உள்ளது. சேசிங் செய்வதில் சில விஷயங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று ஸ்டீபன் பிளமிங் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி எப்படி

அதிரடி எப்படி

வீரர்கள் அதிரடியாக ஆடுவது இல்லை. வயதாகிவிட்டது என்று பிளமிங் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கேவில் கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் தங்களை ஒரு போட்டியிலாவது நிரூபித்துவிட்டனர். ஜடேஜா, வாட்சன், டூ பிளசிஸ் என்று வயதான வீரர்கள் தங்களை நிரூபித்துவிட்டனர். ஆனால் தோனிதான் இன்னும் பார்மிற்கு வரவில்லை.இதனால் தோனியைதான் பிளமிங் குத்தி காட்டி பேசுகிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:49 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+