
முதல் இரண்டு போட்டி
முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. ஆனால் அதற்குபின் அடுத்தடுத்த போட்டிகளில் வரிசையாக ராஜஸ்தான் மிக மோசமான தோல்வியை தழுவியது. மொத்தம் 6 போட்டிகளில் ஆடிய ராஜஸ்தான் அணி வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து.

பிரஷர்
ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. முதல் 4 வீரர்கள் அந்த அணியில் நன்றாகவே ஆடுகிறார்கள். ஆனால் இவர்கள் நான்கு பேரும் அவுட் ஆனால் அதன்பின் வரிசையாக மிடில் ஆர்டர் வீரர்கள் மோசமாக ஆடி அவுட்டாகி விடுகிறார்கள். ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை விட மோசமாக இருக்கிறது.

மிடில் ஆர்டர்
கடந்த சில போட்டிகளாக ஓப்பனிங்கும் சரியாக இல்லை. ராஜஸ்தான் அணியில் விளையாட வேண்டிய பென் ஸ்டோக்ஸ் இப்போதுதான் அமீரகம் வந்து உள்ளார். இவர் அடுத்த போட்டியில்தான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவார். இந்த நிலையில்தான் அடுத்த போட்டிக்கு பின் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு பென் ஸ்டோக்ஸ் கைக்கு செல்லுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

யோசனை
ராஜஸ்தான் அணி நிர்வாகம் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை நீக்கிவிட்டு அங்கு ஜோஸ் பட்லர் அல்லது பென் ஸ்டோக்ஸை களமிறக்க திட்டமிட்டு வருகிறது என்று தகவல்கள் வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்றதை தவிர ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஒரு தலைவராக பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதேபோல் அவரிடம் வெற்றிபெறுவதற்கான விருப்பம் இருப்பது போலவே தெரியவில்லை.

மோசமான டீம்
அணியில் சில வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வாய்ப்பு கொடுக்கிறார். துணிச்சலாக முடிவு எடுப்பது இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இவரின் கேப்டன்சியை பார்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடும் கோபத்தில் உள்ளது. இவரின் பேட்டிங்கும் கடந்த 4 போட்டிகளாக மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீக்கம்
இதனால் இவரை நீக்கிவிட்டு .. இரண்டு இங்கிலாந்து வீரர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் அணி யோசித்து வருகிறது. புனே அணியின் கேப்டனாக தோனி இருந்த போது தொடரின் பாதியில் அவரின் கேப்டன்சி சரியில்லை என்று கூறி நீக்கப்பட்டார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றார். தற்போது அதே விதி ஸ்டீவ் ஸ்மித்திற்கு திரும்ப வந்துள்ளது. தோனிக்கு அன்று நடந்தது இன்று ஸ்டீவ் ஸ்மித்திற்கு நடக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒப்புக்கொண்டார்
தனது தோல்வியை ஒரு வகையில் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் கூட ஏற்றுகொண்டார் என்றும் கூறுகிறார்கள். நாங்கள் சரியாக ஆடுவது இல்லை. இரண்டு இன்னிங்சிலும் நாங்கள் சரியாக ஆடவில்லை. பிரஷருக்கு கீழ் எப்படி ஆடுவது என்று தெரியவில்லை. அதுதான் மிகப்பெரிய தவறு. இப்படி ஆடினால் நிறைய போட்டிகளில் வெல்ல முடியாது. நானும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஏனோ என்னால் சரியாக ஆட முடியவில்லை, என்று தனது தவறை தற்போது ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











