இவரின் பவுலிங்-ஆக்சன் தவறாக உள்ளது.. நேற்று மேட்சில் வசமாக சிக்கிய மூத்த வீரர்.. விசாரிக்கும் ஐபிஎல்
துபாய்: நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் பவுலிங் ஆக்சன் தவறாக இருந்ததாக களத்தில் இருந்த நடுவர்கள் புகார் செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிலும் இந்த சீசனில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நிறைய திருப்பங்கள் நடந்து உள்ளது. டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் அதிரடி வெற்றிகள் மூலம் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் உள்ளது.
அதிலும் கொல்கத்தா அணி மிக கஷ்டமான போட்டிகளில் கூட எளிதாக வெற்றிபெற்று ஆச்சர்யம் அளிக்கிறது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அவர்களின் பவுலர் சுனில் நரேன் மிக முக்கியமான துருப்பு சீட்டாக இருக்கிறார்.

ஆனால் என்ன
இந்த நிலையில் நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் பவுலிங் ஆக்சன் தவறாக இருந்ததாக களத்தில் இருந்த நடுவர்கள் புகார் செய்துள்ளனர். நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றது. கொல்கத்தா 164 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் 162 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

விதிகள்
நேற்றைய போட்டியில் சுனில் நரேன் போட்ட பவுலிங் ஐசிசி விதிகளுக்கு எதிராக இருப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பவுலர் இப்படி எல்லாம் பவுலிங் செய்யலாம் என்று ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டு கையை வளைத்து பவுலிங் செய்வது, த்ரோ பால் செய்வது தவறு என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

நேற்று விதி மீறல்
இந்த நிலையில் இந்த ஐசிசி விதிகளை மீறி நேற்று சுனில் நரேன் பவுலிங் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. களத்தில் இருந்த நடுவர் சுனில் நரேன் பவுலிங்கை பார்த்துவிட்டு இந்த புகாரை அளித்து இருக்கிறார். இதனால் ஐபிஎல் நிர்வாகம் சுனில் நரேனுக்கு தற்போது வார்னிங் கடிதம் அனுப்பி உள்ளது.

கடிதம்
அதேபோல் களத்தில் இருந்த நடுவர்கள் கொடுத்த புகாரையும் ஐசிசி விசாரிக்க தொடங்கி உள்ளது. சுனில் நரேன் போட்ட ஓவர்களை சோதனை செய்ய ஐபிஎல் முடிவு செய்துள்ளது. அதோடு இவருக்கு தற்போது முதல் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இவர் சரியாக பவுலிங் செய்ய வேண்டும். இவர் இரண்டாவது வார்னிங் பெற்றால் தடை செய்யப்படுவார்.

தடை
இரண்டாவது முறை இதே தவறை இவர் செய்தால், ஐபிஎல் தொடரில் இந்த வருடம் அவர் மேலும் விளையாட முடியாத நிலை ஏற்படும். இதற்கு முன்பே பழைய ஐபிஎல் தொடரிலும், சில சர்வதேச போட்டிகளிலும் சுனில் நரேன் இதே தவறை செய்துள்ளார். அப்போதெல்லாம் சுனில் நரேன் தடை பெற்று பின் மீண்டும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications