எப்படி அவரால் முடிந்தது? கிரிக்கெட் உலகையே ஆட வைத்த நடராஜன்.. கடைசி ஓவரில் நடந்த அந்த சம்பவம்!
துபாய்: நேற்று டெல்லிக்கு எதிராக போட்டியில் தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றிபெற்றது.
இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படி
இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

கடைசி ஓவர்
இந்த தொடர் முழுக்க நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். யார்க்கர் போடுவதில் வல்லவரான இவர் மிகவும் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசி வருகிறார். இவரின் துல்லியமான யார்க்கரை பார்த்து.. ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இவருக்கு.. டெத் ஓவரில் பவுலிங் செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளார்.

சூப்பர்
ஹைதராபாத் அணியில் மார்ஷ், புவனேஷ்வர் குமார் காயமடைந்த நிலையில் டெத் ஓவர் போடும் பணியை நடராஜன் சிறப்பாக செய்து வருகிறார். நேற்று கடைசி ஓவர் வீசிய நடராஜன் வெறும் 7 ரன்கள்தான் கொடுத்தார். அதிலும் அவர் 6 பந்திலும் யார்க்கர் போட்டது மலைக்க வைத்தது. ஆம் நடராஜன் வீசிய கடைசி ஓவரில்.. ஆறு பணத்திலும் நடராஜன் யார்க்கர் வீசினார்.

பும்ரா ஷமி
பும்ரா ஷமி போன்ற வீரர்கள் கூட கடைசி ஓவரில் ஆறு பந்தும் யார்க்கர் போட முடியவில்லை. ஆனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத ஒரு வீரர் ஆறும் பந்தும் யார்க்கர் போடுவது பலரையும் வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. அதிலும் இவர் துல்லியமாக சரியாக வேகத்தில் , டென்சன் இல்லாமல் பந்து வீசுவது பலரையும் வியப்பிற்கு ஆழ்த்தி உள்ளது.

சாதனை
இந்த சீசனில் அதிக யார்க்கர் வீசிய வீரர் என்ற பெயரை நடராஜன் பெற்றுள்ளார். மொத்தம் 63 யார்க்கர்களை இவர் வீசி உள்ளார். மற்ற வீரர்கள் யாரும் 30க்கும் அதிகமான யார்க்கர் பந்துகளை இந்த தொடரில் வீசவில்லை.

இந்திய அணி
நேற்று இவரின் பவுலிங்கை பார்த்த பதான் போன்ற முன்னாள் வீரர்கள், நெட்டிசன்கள் பலர் நடராஜனை இந்திய ஆடும் அணியில் எடுக்க வேண்டும். பும்ராவையும் இவரையும் ஒன்றாக ஆட வைக்க வேண்டும். இவர்கள் ஒன்றாக களமிறங்கினால் மிக சிறப்பாக இருக்கும்.. இந்திய பவுலிங் புதிய உச்சத்தை அடையும் என்று கூறியுள்ளனர். நடராஜனை இந்திய அணியில் எடுக்க பலர் கோரிக்கை வைத்துள்ளனர் .


Click it and Unblock the Notifications