For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிரண்டு போன பிரிட்லீ.. வெளிநாட்டு பிளேயர்களை புரட்டி எடுத்த தமிழக வீரர்.. பரபரப்பு சம்பவம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் செய்த பவுலிங் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

ஹைதராபாத் டெல்லிக்கு இடையிலான போட்டி.. 42 பந்துகளில் 85 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி.. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக சுதாரிக்க தொடங்கியது. 14வது ஓவர் வரை டெல்லி நிதானமாக ஆடியது.

ஹைதராபாத் பவுலிங் அப்போதுதான் சொதப்ப தொடங்கியது. ரிஷப் பண்ட், ஹெட்மேயர் இருவரும் களத்தில் நங்கூரம் போல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட தொடங்கினார்கள். அதற்கு முன்தான் அபிஷேக் சர்மாவின் 13 ஓவரின் கடைசி இரண்டு பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர் சென்றது. இதனால் மொத்தமாக போட்டி ஹைதராபாத்தின் கையை விட்டு சென்று விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

14வது ஓவர்

14வது ஓவர்

ஆனால் 14 ஓவரை வீச தமிழக வீரர் தங்கராசு நடராஜனை ஹைதராபாத் அணி களமிறங்கியது. ரன் செல்வதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம். பேட்டிங்கில் பண்ட் சிக்ஸ் அடிக்க தயாராக இருந்தார். ஆனால் முதல் பந்தே மிக சரியான லென்தில் யார்க்கர் போட்டார் நடராஜன். பந்தின் வேகத்தை பார்த்து பண்ட் மிரண்டு போனார். அதற்கு அடுத்த பந்தே மீண்டும் யார்க்கர் போட்டார். ஆனால் அதில் பவுண்டரி சென்றது.

அடுத்த பால்

அடுத்த பால்

ஆனால் நடராஜன் விடவில்லை, மூன்றாவது பந்திலும் காலை பார்த்து யார்க்கர் போட்டார். நான்காவது பந்தில் மீண்டும் யார்க்கர் போட்டார். இரண்டு பந்திலும் ஒரு ஒரு ரன்கள் மட்டுமே சென்றது. வரிசையாக நடராஜன் யார்க்கர் போடுவதை கணித்த ரிஷப் பண்ட் கொஞ்சம் இறங்கி வந்து பேட்டிங் செய்தார். யார்க்கர் பந்தை இறங்கி வந்து, சிக்ஸர் அடிக்க முயன்றார்.

ஆனால் என்ன செய்தார்

ஆனால் என்ன செய்தார்

ஆனால் அதை சரியாக கணித்த நடராஜன் சரியாக பவுன்சர் வீசினார். அது வைட் பந்தாக சென்றது. ஆனால் விடவில்லை. மீண்டும் ஐந்தாவது பந்தில் நடராஜன் யார்க்கர் வீசினார். அதற்கு அடுத்த பந்தும் நடராஜன் வீசினார். இதில் எல்லாம் இரண்டு வீரர்களும் சிங்கிள் மட்டுமே அடித்தனர். அந்த ஓவரில் போட்டி மொத்தமாக ஹைதராபாத் பக்கம் திரும்பியது.

சாதனை

சாதனை

இதன் மூலம் ஒரே ஓவரில் அதிக யார்க்கர் பந்துகளை வீசிய ஒரே வீரர் என்ற சாதனையை தமிழகத்தை சேர்ந்த நடராஜன் படைத்து உள்ளார். அதன்பின் மீண்டும் 18வது ஓவரை நடராஜன் வீசினார். இதுவும் மாஸ்டர் கிளாஸ் டெத் ஓவராக அமைந்தது.அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதோடு மார்க்ஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டையும் எடுத்தார். கடைசி பந்தில் அவர் போட்ட துல்லியமான யார்க்கர் மைதானத்தையே புரட்டி போட்டது.

கால்

கால்

அந்த ஓவரில் அவர் போட்ட ஐந்து பந்துகள் சரியாக பேட்ஸ்மேன் காலிலேயே குத்தியது. அந்த அளவிற்கு துல்லியமான யார்க்கரை வீசினார். ஒவ்வொரு பந்துகளையும் 140 + கிமீ வேகத்தில் வீசினார். இவரின் பவுலிங்கை பார்த்து ஆஸ்திரேலிய ஜாம்பவான்.. இப்படித்தான் ஓவர் போட வேண்டும், இதுதான் யார்க்கர் வீசும் நுட்பம் என்று நடராஜனை பாராட்டி உள்ளார்.

வெற்றி

வெற்றி

இதன் மூலம் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும் காரணமாக நடராஜன் இருந்தார். ஐபிஎல் போட்டியில் இதன் மூலம் தற்போது நடராஜன் கவனம் ஈர்த்துள்ளார். சேலம் அருகே இருக்கும் சின்னப்பாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்.

வசதி இல்லை

வசதி இல்லை

சரியான பயிற்சி வசதிகள் இன்றி.. நண்பர்களுடன் காடுகளில் டென்னிஸ் பால் வைத்து ஆடி பயிற்சி பெற்றார். பின் டிஎன்பிஎல் போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்தவர் தற்போது ஐபிஎல் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

Story first published: Wednesday, September 30, 2020, 11:30 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020: Tamilnadu player Natarajan stuns the foreign players with his yorkers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+