Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க போக கூடாது.. ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க முடியாது.. முக்கிய வீரருக்கு கடைசி நேர தடை.. பின்னணி

துபாய்: ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர் ஒருவரை இழுக்க முயன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணிகளில் கடைசி நேரத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களைவிட உள்நாட்டு வீரர்கள்தான் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

அதிலும் டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இந்த முறை அதிரடி காட்டி வருகிறார்கள். ஆனாலும் இன்னொரு பக்கம் வெகு சில வெளிநாட்டு வீரர்களும் அதிரடியாக ஆட தொடங்கி உள்ளனர்.

வங்கதேசம்

வங்கதேசம்

எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்கள் சிறப்பாக ஆடுவது வழக்கம். இந்திய பிட்ச்களில் இதற்கு முன் போட்டி நடந்த காரணத்தால் வங்கதேச வீரர்கள் இதில் சிறப்பாக ஆடினர். அதில் முக்கியமான வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான். வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்து உள்ளார். 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

16 விக்கெட்

16 விக்கெட்

அந்த சீசனில் அவர் 16 விக்கெட் வீழ்த்தி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு காரணமாக முஸ்தபிசூர் இருந்தார். இந்த நிலையில் இந்த முறை முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் எடுக்க மும்பை மற்றும் கொல்கத்தா அணியில் முயன்றது. மும்பை அணியில் மலிங்கா விளையாடவில்லை. அதேபோல் கொல்கத்தா அணியில் ஹாரி குர்னே விளையாடவில்லை.

நீக்கம்

நீக்கம்

இதனால் இவர்களுக்கு மாற்றாக முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் எடுக்க மும்பை, கொல்கத்தா இரண்டும் முயன்றது. இவருக்கு 1-2 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் இரண்டு அணிகளும் ஒப்பந்தம் செய்ய நினைத்தது. ஆனால் கடைசி நொடியில் இவருக்கு ஐபிஎல் விளையாடுவதில் இருந்து வங்கதேச அணி நிர்வாகம் தடை விதித்தது.

தடை

தடை

நீங்கள் ஐபிஎல் விளையாட செல்ல கூடாது என்று வங்கதேச அணி நிர்வாகம் முஸ்தபிசூர் ரஹ்மானிடம் கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் இலங்கை அணியுடன் வங்கதேசம் கிரிக்கெட் தொடரில் ஆடுவதாக இருந்தது. இதற்காக அந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இதில் முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வாகி இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் அவரை ஐபிஎல் விளையாட கூடாது என்று வங்கதேசம் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் கடைசி நொடியில் இலங்கை அணி நிர்வாகத்தின் கொரோனா விதிகள் காரணமாக மொத்தமாக வங்கதேச தொடர் நிறுத்தப்பட்டது. இதனால் முஸ்தபிசர் ரஹ்மான் ஐபிஎல்லும் விளையாட முடியாமல் , இலங்கைக்கும் செல்ல முடியாமல் போனது .

கோபம்

கோபம்

இதனால் முஸ்தபிசர் ரஹ்மான் வங்கதேச அணி நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஐபிஎல் விளையாடி இருந்தால் நான் பார்மில் இருந்திருப்பேன். ஒரு கோடி ரூபாய் பணமும் கிடைத்து இருக்கும் . ஆனால் கடைசியில் எதுவும் நடக்காமல் போய்விட்டது.. என்று அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, September 30, 2020, 21:04 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+