Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கே இது அழகா? தோனியை சீண்டிய கம்பீரின் வார்த்தைகள்.. அவசரத்தில் எடுத்த தப்பான முடிவு!

துபாய்: கம்பீர் மற்றும் சேவாக் கொடுத்த அழுத்தம் காரணமாக தோனி எடுத்த முடிவு ஒன்று, தற்போது தோனிக்கே எதிராக திரும்பி உள்ளது.

சென்னை அணி ஐபிஎல் தொடரில் சொதப்ப தொடங்கி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சென்னை அணி மண்ணை கவ்வியது ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதிலும் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளிடம் தோல்வி அடைந்தது சென்னையை பெரிய அளவில் பாதித்து உள்ளது. இதனால் சென்னையின் பிளே ஆப் வாய்ப்பே கேள்விக்கு உள்ளாக தொடங்கி உள்ளது.

என்ன குற்றச்சாட்டு

என்ன குற்றச்சாட்டு

கடந்த போட்டிகளில் சென்னையின் தோல்விக்கு தோனி தாமதமாக களமிறங்கியதுதான் காரணம் என்று கூறப்பட்டது. அதாவது 7வது இடத்தில் தோனி களமிறங்குகிறார். சாம் கரன் மற்றும் ஜடேஜாவிற்கு அடுத்துதான் தோனி களமிறங்குகிறார். இதுதான் சென்னையின் தோல்விக்கு காரணம் என்று பலரும் தோனி மீது விமர்சனங்கள் வைத்தனர்.

பலர் கருத்து

பலர் கருத்து

முக்கியமாக முன்னாள் வீரர்கள் பலர் தோனிக்கு எதிராக பேசி இருந்தனர். எப்போதும் தோனியை மோசமாக விமர்சனம் செய்யும் கம்பீரும் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, தோனியை விமர்சனம் செய்தார். கம்பீர் தனது விமர்சனத்தில், சென்னை அணியில் இக்கட்டான சூழ்நிலையில் கூட தோனி துணிந்து செயல்படவில்லை. அவர் ஏன் பேட்டிங் களமிறங்க இவ்வளவு தாமதம் செய்கிறார்.

மோசம்

மோசம்

ராஜஸ்தானுக்கு எதிராக அவர் 7வது இடத்தில் இறங்கியதை பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்பே அவர் களமிறங்கி ஆடி இருக்க வேண்டும். ஒரு கேப்டனுக்கு அதுதான் அழகு. தோனி செய்தது தவறு,என்று கம்பீர் குறிப்பிட்டார். அதேபோல் தோனியின் பேட்டிங் குறித்து சேவாக்கும் விமர்சனம் செய்தார். சேவாக் தனது கருத்தில், தோனி மிக மோசமாக பேட்டிங் செய்தார். சென்னை அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு அவர் விளையாட வேண்டும்.

ஆனால்

ஆனால்

ஆனால் அவரின் பேட்டிங்கில் நிறைய தவறு இருந்தது.சிஎஸ்கேவை வெல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கொஞ்சம் கூட விளையாடவில்லை. அவர் 7வது இடத்தில் ஆடுவது தவறு. தோனியின் ஆட்டத்தில் வேகம் குறைந்து, தவறுகள் அதிகரித்து உள்ளது என்று சேவாக் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இந்த நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக தோனி நேற்று முக்கியமான முடிவை எடுத்தார்.

நேற்று பேட்டிங்

நேற்று பேட்டிங்

அதன்படி நேற்று போட்டியில் தோனி 5 விக்கெட் விழுந்த பின் களமிறங்கினார். ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு முன்பாக தோனி களமிறங்கினார். எல்லோரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தோனி முன்பே பேட்டிங் இறங்கினார். அதிலும் கம்பீர் கூறிய வார்த்தைகள் தோனியை கண்டிப்பாக சீண்டி இருக்க வேண்டும். ஆனால் நேற்று தோனி சீக்கிரம் களமிறங்கியும் கூட பேட்டிங் கைகொடுக்கவில்லை.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

தொடக்கத்தில் பவுண்டரி அடித்து ஆட தொடங்கிய தோனி அதன்பின் மீண்டும் டொக் வைக்க தொடங்கினார். மிக மோசமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட தொடங்கினார். இதனால் சென்னைக்கு தேவையான ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. நேற்று 12 பந்துகள் பிடித்த தோனி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் மோசமாக கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஒருவேளை

ஒருவேளை

கம்பீர், சேவாக் பேச்சை கேட்காமல் நேற்று தோனி சுயமாக முடிவு எடுத்து இருந்தால் கூட போட்டியின் போக்கு வேறு மாதிரி இருக்கும். சாம் கரன் போன்ற ஹிட்டர்களை களமிறக்கி இருந்தால் போட்டி கொஞ்சம் சென்னை பக்கம் திரும்பி இருக்கும் அல்லது தோனி 4வது இடத்திலேயே டு பிளசிஸுக்கு பின்பாவது இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சென்னை அணி உடனே தனது பேட்டிங் ஆர்டரில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Saturday, September 26, 2020, 10:17 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+