Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு சின்ன விஷயம்.. மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டது.. சூட்சமத்தை கண்டுபிடித்த சிஎஸ்கே.. டிவிஸ்ட்!

துபாய்: சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக சாம் கரன் களமிறங்கி இன்று விளையாடியது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து டாஸ் தோல்வி அடைந்த சிஎஸ்கே இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

யாரும் எதிர்பார்க்காமல் இன்று அணியில் இருந்து ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கூடுதலாக இன்னொரு ஸ்பின் பவுலர் பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்காக ஓப்பனிங் வீரராக டு பிளசிஸ் மற்றும் சாம் கரன் இறக்கப்பட்டனர். வாட்சன் ஒன் டவுன் வீரராக களமிறங்கினார். பேட்டிங் இறங்கிய டு பிளசிஸ் இன்று டக் அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் சாம் கரன் அதிரடியாக ஆடினார். தன்னை தோனி ஏன் ஓப்பனிங் இறக்கினாரோ அதை உணர்ந்து அதிரடியாக ஆடினார்.

ஏன் இறக்கினார்

ஏன் இறக்கினார்

முதல் பவர்பிளேவில் அதிக ரன் வர வேண்டும் என்றுதான் சாம் கரன் போன்ற ஹிட்டரை தோனி இன்று ஓப்பனிங் களமிறங்கினார். அதை சாம் கரன் ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறார். 21 பந்துகள் பிடித்த சாம் கரன் 31 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். அதிலும் கலீல் ஓவரில் இவர் பந்துகளை பறக்கவிட்டு பெரிய நம்பிக்கை அளித்தார்.

மாற்றம்

மாற்றம்

இவர் தொடக்கத்தை சிறப்பாக அமைத்த காரணத்தால் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை தொடங்க வசதியாக இருந்தது. சாம் கரனை ஓப்பனிங் இறக்கலாம் என்ற முடிவு மொத்தமாக ஆட்டத்தையே மாற்றி உள்ளது. சாம் கரன் - டு பிளசிஸ் ஓப்பனிங் இறங்குவதால்.. முதல் 5 ஓவரில் 40+ ரன்கள் வரும். இதனால் அதன்பின் வாட்சன், ராயுடு இறங்கி அடிக்க வசதியாக இருக்கும்.

மிடில் தேவை இல்லை

மிடில் தேவை இல்லை

இவர்கள் நான்கு வீரர்கள் இருப்பதால் 5வது இடத்தில் தோனி இறங்க வசதியாக இருக்கும். இதனால் மிடில் ஆர்டரில் என். ஜெகதீசன் அல்லது ஜாதவ் இறங்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு பேட்ஸ்மேன் இல்லாமலே சிஎஸ்கேவின் பேட்டிங் வலிமையாக இருக்கும். சாம் கரனை ஓப்பனிங் இறக்கிய ஒரு முடிவு மொத்தமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளது.

வேறு என்ன

வேறு என்ன

அதோடு ஜெகதீசனை நீக்குவதால்.. கூடுதலாக ஒரு ஸ்பின் பவுலர்களை உள்ளே கொண்டு வர முடிகிறது. பியூஷ் சாவ்லா, கரன் சர்மா என்று இரண்டு ஸ்பின் பவுலர்கள் களமிறங்க முடியும். சிஎஸ்கேவின் புதிய வெற்றி பார்முலாவாக இது மாறியுள்ளது. இதனால் பவுலிங்கும் வலிமையாக இருக்கும். ஒரு பக்கம் ஓப்பனிங்கும் நன்றாக இருக்கும், இன்னொரு பக்கம் ஸ்பின் பவுலிங்கும் நன்றாக இருக்கும். சாம் கரனை ஓப்பனிங் இறங்கிய ஒரு முடிவு மொத்தமாக அணியின் வலிமையை மாற்றி உள்ளது.

Story first published: Tuesday, October 13, 2020, 21:01 [IST]
Other articles published on Oct 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+