Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் மாறிவிட்டது.. லேட்டாக பேட்டிங் இறங்கியது ஏன்? உண்மையை உடைத்த தோனி.. இப்படி ஒரு காரணமா!

சார்ஜா: நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசியில் பேட்டிங் செய்ய வந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று ராஜஸ்தான் மற்றும் சென்னைக்கு இடையில் நடந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கடைசியில் வந்தார்

கடைசியில் வந்தார்

இந்த போட்டியில் தோனி மிகவும் தாமதமாக பேட்டிங் இறங்கினார். சாம் கரன், ரூத்துராஜ், கேதார் ஜாதவ் ஆகியோர் இறங்கிய பின்புதான் தோனி களத்திற்கு வந்தார். அதிலும் தோனி களத்திற்கு வந்து தொடக்கத்தில் அதிரடியாக ஆடவில்லை. கடைசியில்தான் அதிரடியாக ஆடினார்.

கேள்விகள்

கேள்விகள்

இதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். தோனி இப்படி கடைசியில் பேட்டிங் செய்ய வந்தது தவறு. அவர் கொஞ்சம் முன்பே வந்து இருக்கலாம். அவர் ஏன் இப்படி செய்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பதில் என்ன

பதில் என்ன

இதற்கு தற்போது தோனி பதில் அளித்துள்ளார். அதில், நான் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடவில்லை. நீண்ட நேரம் நான் பேட்டிங் பயிற்சி செய்யவில்லை. இதனால்தான் நான் சீக்கிரமே பேட்டிங் இறங்கவில்லை. எங்களை தனிமைப்படுத்திக் கொண்டதும் இதற்கு காரணம்.

14 நாட்கள்

14 நாட்கள்

14 நாட்கள் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இதனால் சரியாக பேட்டிங் பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் பேட்டிங் இறங்கவில்லை. அதேபோல் சில வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்தேன். சாம் கரனை முன்பே இறக்கி சோதனை செய்தோம்.

வாய்ப்பு கொடுத்தோம்

வாய்ப்பு கொடுத்தோம்

அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம். சோதனை முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றால் மீண்டும் பழைய விஷயங்களை செய்யலாம். டு பிளசிஸ் நன்றாக விளையாடுகிறார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே அவர்களை முன்பே களமிறக்கினோம் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

இனி இப்படிப்பதான்

இனி இப்படிப்பதான்

முன்பே இது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து இருந்தனர். இனி தோனி டாப் ஆர்டரில் பேட்டிங் இறங்க மாட்டார். கடைசியில்தான் இறங்குவார். முடிந்த அளவு இளைஞர்களுக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய பயிற்சி கொடுப்பார். சிஎஸ்கே அணியை எதிர்காலத்திற்கு அவர் தயார் செய்கிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, September 23, 2020, 9:27 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+