Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றாக விளையாடியவரை நீக்கியது ஏன்? பியூஸ் சாவ்லாவை நீக்கிய தோனி.. பின்னணியில் இருக்கும் பரபர காரணம்!

அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இருந்து பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை முதலில் பவுலிங் செய்கிறது.

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் கொல்கத்தா அணிக்கும், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையில் இன்று மோதல் நடக்க உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இன்று சிஎஸ்கே நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இருந்து பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக தற்போது அணியில் கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பியூஷ் சாவ்லா நன்றாக பவுலிங் செய்து வந்தார். ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆனால் நீக்கம்

ஆனால் நீக்கம்

ஆனாலும் இவர் நீக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக இன்னொரு லெக் பிரேக் கூக்ளி பவுலரான கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார். பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணமாக இவர் பழைய கொல்கத்தா வீரர் என்பதால் பாதுகாப்பு கருதி அணியில் எடுக்கவில்லை. அடுத்ததாக இவர் கடந்த நான்கு போட்டிகளாக விக்கெட் எடுத்தாலும் அதிகம் ரன் கொடுக்கிறார் .

வேகம்

வேகம்

முக்கியமாக ஸ்பின் போடும் இவரால் பவுலிங் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 95 கிமீ வேகம் வரை இவர் பவுலிங் செய்கிறார். இவருக்கு தோனி அறிவுரை வழங்கியும் மாறவில்லை. இதே வேகத்தில் கொல்கத்தாவில் இருக்கும் ரசல், இயான் போன்ற வீரர்களுக்கு பந்து வீசினால் அது சிஎஸ்கேவிற்கு சிக்கலாகும். இதனால் ஸ்லோ பாலில் கூக்ளி வீசும் கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார்.

வேறு என்ன காரணம்

வேறு என்ன காரணம்

அதேபோல் கடந்த 4 போட்டிகளிலும் இவரின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. அதிலும் அணியின் பயிற்சியாளர் பிளமிங் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது வேகமாக ஓட கூடிய, நன்றாக பீல்டிங் செய்ய கூடிய சர்மா அணிக்குள் வந்துள்ளார்.

பேட்டிங்

பேட்டிங்

தற்போது அணியில் இருக்கும் 10 பேர் பேட்டிங் செய்ய கூடியவர்கள். பியூஷ் சாவ்லா மட்டுமே பேட்டிங் செய்ய மாட்டார். இந்த நிலையில் தற்போது 11வதாக கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார். இவரும் கடைசி நேரத்தில் அணிக்குள் வந்து நன்றாக பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, October 7, 2020, 19:20 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+