For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13 வருட ஐபிஎல் வரலாறு : இந்த வருஷம் மும்பை இந்தியன்ஸ் ரொம்ப சிறப்பா விளையாடியிருக்காங்க!

மும்பை : கடந்த 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு மும்பை வந்த ஆகாஷ் அம்பானி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்சின் தரம் மிகவும் நம்பமுடியாததாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து முன்னிலை

தொடர்ந்து முன்னிலை

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பம் முதலே மிகவும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தது. லீக் போட்டிகள் உள்ளிட்ட 16 போட்டிகளிலும் அந்த அணியின் ஆட்டங்கள் தரமானதாக இருந்தது. ஆரம்பம் முதலே முதல் மூன்று இடங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தது மும்பை அணி.

ஆகாஷ் அம்பானி பெருமிதம்

ஆகாஷ் அம்பானி பெருமிதம்

இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவகையில் இந்த ஆண்டு மிகவும் தரமான ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்துள்ளதாக அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். தொடரை முடித்துக் கொண்டு மும்பை வந்த அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

98% திட்டம் பூர்த்தி

98% திட்டம் பூர்த்தி

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் தரம் நம்ப முடியாததாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் இந்த சீசனுக்காக திட்டமிட்டவற்றில் 98 சதவிகிதத்தை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறப்பான அணிக்கு உதாரணம்

சிறப்பான அணிக்கு உதாரணம்

ஒரு சிறப்பான அணி என்பது அனைத்து அம்சங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு சிறந்த காரை சாலையில் ஓட்டுவதை போன்றது என்று ஆகாஷ் தெரிவித்தார். மேலும் 6வது சீசனிலிருந்தே ஹர்திக், க்ருணால் மற்றும் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு பலம் சேர்த்ததாகவும் அதில் மேலும் வலிமையை கூட்ட திட்டமிட்டு செயல்புரிந்ததாகவும் கூறினார்.

Story first published: Sunday, November 15, 2020, 13:26 [IST]
Other articles published on Nov 15, 2020
English summary
A good team is when we see all the parts come together and we move like the best car on the road -Akash
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+