
என்ன சொன்னார்கள்
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி காரணமாக கேப்டன் தோனியின் குடும்பத்தினரை இணையத்தில் சில விஷமிகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனிதான் காரணம். அவர் வீட்டில் இருந்து பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் சிலர் தோனியின் மனைவி சாக்சியை பற்றி தவறாக பேசி உள்ளனர்.

பாலியல்
தோனியின் மனைவி சாக்சி குறித்து சிலர் பாலியல் ரீதியாக தவறாக பேசி உள்ளனர். இதெல்லாம் போக சில விஷமிகள் ஒரு படி மேலே போய் தோனியின் மகள் ஸிவா குறித்தும் தவறாக பேசி உள்ளனர். ஸிவாவிற்கு பாலியல் ரீதியாக சிலர் மிரட்டல்களை டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் விடுத்துள்ளனர். இணையம் முழுக்க இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜாதவ்
சின்னஞ்சிறுமியான தோனியின் மகள் குறித்த இந்த விஷமத்தனமான கருத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோனியின் குடும்பத்தை பற்றி மட்டுமின்றி ஜாதவின் குடும்பத்தை பற்றியும் இவர்கள் மிக தரக்குறைவாக பேசி உள்ளனர். கேதார் ஜாதவை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, கெட்ட வார்த்தைகளில் திட்டி உள்ளனர். அதோடு அவரின் மனைவி குறித்தும் தவறாக பேசி உள்ளனர்.

கொந்தளிப்பு
சில விஷமிகளின் இந்த கடுமையான கருத்தை பார்த்து தற்போது சிஎஸ்கே ரசிகர்களே கொந்தளித்து போய் இருக்கிறார்கள். தோனியின் பேட்டிங்கை நீங்கள் விமர்சனம் செய்யலாம் . ஆனால் அவரின் குடும்பம் குறித்து பேசுவது தவறு. அதிலும் சின்ன குழந்தை குறித்து பேசுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சர்ச்சை
சில அதிதீவிர கிரிக்கெட் ரசிகர்களின் இந்த கமெண்ட்கள் சிஎஸ்கே ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. முக்கியமாக கிரிக்கெட் விமர்சகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது போன்ற ரசிகர்கள் இருப்பதால்தான் தோனி போன்றவர்கள் இணையத்தில் ஆக்டிவாக இருப்பதில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications