Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் தேர்வான நடராஜன்.. முதல்வர் சொன்ன வாழ்த்தை பாருங்க.. ப்ப்பா செம பார்மில் இபிஎஸ்!

துபாய்: இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த வருடத்தில் நடக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் தொடராக இது பார்க்கப்படுகிறது.

இதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த இந்திய அணியில் நேற்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டது. வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையில்.. அணியில் சில வீரர்கள் மாற்றப்பட்டனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது சேலத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தேர்வாகி உள்ளார். தமிழக வீரர் நடராஜன்.. இந்திய அணியில் முதலில் வலை பயிற்சி குழுவிற்கு தேர்வானார். தற்போது மொத்தமாக 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகி உள்ளார்.

செம

செம

இளம் வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக டி 20 அணியில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அவருக்கு மாற்றாக நடராஜன் உள்ளே வந்துள்ளார். இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதல்வர் பழனிச்சாமியும், நடராஜனும் ஒரே மாவட்டத்தை சேர்த்தவர்கள் என்பதால் முதல்வர் பழனிச்சாமி ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!, என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் நடராஜன். அவரை வாழ்த்தி.. தான் டிரெண்டிங்கில்தான் இருக்கிறேன் என்பதை முதல்வர் பழனிச்சாமி நிரூபித்து உள்ளார். நானும் கிரிக்கெட் எல்லாம் பார்த்து டிரெண்டில்தான் இருக்கிறேன் என்பதை முதல்வர் பழனிச்சாமி நிரூபித்து உள்ளார்.

நடராஜன் எப்படி

நடராஜன் எப்படி

இந்த ஐபிஎல் சீசன் முழுக்க நடராஜன் சிறப்பாக பந்து வீசி வந்தார். இவரின் சிறப்பான டெத் ஓவர் பவுலிங் மற்றும் துல்லியமான யார்க்கர்தான் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க காரணம் என்கிறார்கள். இந்த சீசன் முழுக்க இவர் 63 யார்க்கர் பந்துகளை போட்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 10, 2020, 12:18 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+