மிக முக்கியமான கட்டத்தில்.. மொத்த டீமிற்கும் இப்படி ஒரு நிலையா? என்ன நடக்கிறது ஹைதராபாத் அணியில்?
துபாய்: ஹைதராபாத் அணியில் அடுத்தடுத்து முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். பிளே ஆப் செல்ல போராடி வரும் நிலையில் அந்த அணிக்கு இது பெரிய சிக்கலாக உருவெடுத்து உள்ளது.
2020 ஐபிஎல் தொடரில் நிறைய சுவாரசிய சம்பவங்கள், திருப்பங்கள் நடந்தாலும் கூட முக்கியமான விஷயம் ஒன்று எல்லா அணிகளையும் அச்சுறுத்தி வருகிறது.. அந்த விஷயம் காயம். ஒவ்வொரு அணியிலும் மிக முக்கியமான வீரர்கள் இந்த சீசனில் காயம் அடைகிறார்கள்.
சில அணிகளில் கேப்டன்கள் கூட காயம் காரணமாக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்கள் இப்படி தொடர்ந்து காயம் அடைவதை பிசிசிஐ அமைப்பும் கூட கண்காணித்து வருகிறது.

பிசிசிஐ
அதன்படி தொடரின் தொடக்கத்தில் டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். அதன்பின் சென்னை அணியில் ராயுடு காயம் அடைந்து பின் மீண்டும் வந்தார். பின் பிராவோ காயம் அடைந்து மொத்தமாக தொடரில் இருந்து வெளியேறினார் .

வெளியேற்றம்
இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ரசல் காயம் அடைந்தார். டெல்லியில் மீண்டும் பண்ட் காயம் அடைந்து சில நாட்கள் ஓய்வில் இருந்தார். எல்லாம் போக மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவே காயம் அடைந்து அதனால் அவதிப்பட்டு வருகிறார்.

அவதி
ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் இப்படி காயத்தால் துடிக்கும் போது, ஒரு அணியில் மட்டும் பல வீரர்கள் கடுமையான காயம் அடைந்துள்ளனர். ஹைதராபாத் அணியில் அடுத்தடுத்து முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். பிளே ஆப் செல்ல போராடி வரும் நிலையில் அந்த அணிக்கு இது பெரிய சிக்கலாக உருவெடுத்து உள்ளது.

யார் எல்லாம்
ஹைதராபாத் அணியில் தொடக்கத்தில் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக அவதிப்பட்டார். அதன்பின் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து புவனேஷ்வர் குமார் சென்னைக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்டார் . பின் அவரும் தொடரில் இருந்து வெளியேறியினார்.

வெளியேற்றம்
இப்படி இரண்டு முக்கியமான வீரர்கள் அந்த அணியில் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து அணியில் தற்போது விஜய் சங்கரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். காலில் ஏற்பட்ட இரண்டு காயம் காரணமாக இவரும் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

அடுத்து
இந்த நிலையில் இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இளம் வீரர் சாகா கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய நிலையில் தற்போது அடி வயிற்றில் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

சிக்கல்
இப்படி அணியில் முக்கியமான வீரர்கள் எல்லோரும் காயம் காரணமாக அவதிப்படுகிறார்கள். ஹைதராபாத் அணி எப்படியாவது இந்த தொடரில் அடுத்த இரண்டு போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இப்படி இருக்கும் போது முக்கிய வீரர்கள் ஆட முடியாத நிலை அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications