Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை எல்லாம் புறக்கணித்திருக்க வேண்டும்.. தாஹிரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ஹர்பஜன்.. இது தேவையா?

துபாய்: சிஎஸ்கே அணியின் இரண்டு மூத்த வீரர்கள் நேற்று செய்த டிவிட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இரண்டு டிவிட்களுமே மிக முக்கியமான பாடம் ஒன்றை கிரிக்கெட் உலகிற்கு எடுத்துள்ளது.

சிஎஸ்கேவிற்கு 2020 ஐபிஎல் தொடர் பெரிய அளவில் வெற்றிகரமான தொடராக அமையவில்லை.பிளே ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருந்தாலும் கூட.. சிஎஸ்கேவிற்கு வேறு விதமான சில பிரச்சனைகள் உள்ளன.

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ரெய்னா அடுத்த வருடம் சிஎஸ்கேவிற்கு திரும்புவாரா என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் ஹர்பஜன் இனி சிஎஸ்கேவிற்கு திரும்பவே வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

சிஎஸ்கே அணியில் இந்த வருடம் விளையாட வேண்டிய ஹர்பஜன்.. தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு தொடரில் இருந்து வெளியேறினார். இவர் விலகலுக்கு குடும்ப காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் கொரோனா அச்சம் காரணமாக இவர் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. அதோடு சிஎஸ்கே நிர்வாகத்துடன் இவருக்கு மோதல்.. அதனால் வெளியேறிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

விலகினார்

விலகினார்

இந்த நிலையில் தொடரில் இருந்து வெளியேறியதில் இருந்தே ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணிக்கு எதிராக மறைமுகமாக பேசி வருகிறார். முக்கியமாக தோனிக்கு எதிராக ஹர்பஜன் சிங் அடிக்கடி பேசி வருகிறார். முதலில் தோனியின் வயதை மறைமுகமாக கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் ரீ-டிவிட் செய்திருந்தார். பதான் செய்த டிவிட்டை ஹர்பஜன் ரீ டிவிட் செய்திருந்தார்.

நேற்று என்ன

நேற்று என்ன

அதேபோல் நேற்று ஹர்பஜன் சிங் தனது இன்னொரு ரீ டிவிட்டில் தோனியை மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் வைட் ஒன்றிற்காக நடுவருடன் தோனி மோதியதை ஹர்பஜன் கிண்டல் செய்துள்ளார். நடுவரிடம் தோனி முறையிட்ட வீடியோவை ஷேர் செய்து கிண்டலாக ஹர்பஜன் டிவிட் செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் எப்படி

இன்னொரு பக்கம் எப்படி

ஹர்பஜன் சிங் ஒரு பக்கம் இப்படி டிவிட் செய்து கொண்டு இருக்கும் நிலையில்.. இன்னொரு பக்கம் சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலர் இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார். நான் அணியில் விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை. எனக்கு அணிதான் முக்கியம். வீரர்களுக்கு கூல்டிரிங் எடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை.

கூல்ட்ரிங்ஸ்

கூல்ட்ரிங்ஸ்

கூல்ட்ரிங்ஸ் எடுத்து சென்று வீரர்களுக்கு உதவி செய்வதை நான் மோசமாக நினைக்கவில்லை. எனக்கு சிஎஸ்கே அணியின் வெற்றிதான் முக்கியம் என்று.. இம்ரான் தாஹிர் குறிப்பிட்டு இருந்தார்.ஒரு பக்கம் ஹர்பஜன் சிங் சிஎஸ்கேவை மறைமுகமாக கிண்டல் செய்யும் நிலையில் இன்னொரு பக்கம் மோசமான சூழ்நிலையிலும் கூட இம்ரான் தாஹிர் சிஎஸ்கே பக்கம் நின்று இருக்கிறார்.

வேறுபாடு

வேறுபாடு

மும்பை அணியில் இருந்து 2018ல் கழட்டி விடப்பட்ட ஹர்பஜனுக்கு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனிதான் வாய்ப்பு கொடுத்தார். இல்லையென்றால் இவர் டிவியில் கமென்டரிதான் செய்து கொண்டு இருப்பார்.ஆனால் அப்படிப்பட்ட சிஎஸ்கே அணியை ஹர்பஜன் மோசமாக கிண்டல் செய்து வருகிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இன்னொரு பக்கம் இம்ரான் தாஹிர் சிஎஸ்கேவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் பக்க பலமாக இருக்கிறார். இதனால் தாஹிரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ஹர்பஜன் என்று பலர் இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். 2018ல் உங்களை புறக்கணித்து இருக்க வேண்டும்.. வாய்ப்பே கொடுத்திருக்க கூடாது என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Thursday, October 15, 2020, 12:06 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+