For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்கெட்ச் போட்டது ஒருவர்.. செய்து முடித்தது இன்னொருவர்.. சிஎஸ்கேவில் 2 பேர் கொடுத்த மாஸ் டிரீட்மெண்ட்

துபாய்: இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே பவுலர்கள் இருவரின் பிளான் மொத்தமாக போட்டியை மாற்றியது.

சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தீவிரமாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி இதில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்தில் திணறியது. ஆனால் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி

சென்னை அணி

இன்று இறங்கிய சென்னையில் அணியில் இருந்து முரளி விஜய், ருது ராஜ், ஜோஸ் ஹசல்வுட் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக பிராவோ, அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை அணியில் 6 பவுலர்கள் இருந்தனர். இதனால் சென்னை அணியின் பவுலிங் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிராவோ ஓவர்

பிராவோ ஓவர்

இன்று சென்னை அணிக்குள் பிராவோ வந்த காரணத்தால், கண்டிப்பாக அவர்தான் போட்டியை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரின் பவுலிங்தான் அதிகம் கவனிக்கப்பட்டது. சென்னை அணியின் டெத் ஓவர்கள் கடந்த மூன்று போட்டிகளாக சரியில்லை. இதனால் பிராவோவின் வருகை அதிகம் கவனிக்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.

செம பவுலிங்

செம பவுலிங்

பிராவோவும் அதேபோல் திட்டம் போட்டு பவுலிங் செய்தார். எந்த ஓவரிலும் ரன் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 7வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அந்த ஓவர் ஹைதராபாத் அணிக்கு அதிகம் அழுத்தம் கொடுத்தது.

மாஸ் திருப்பம்

மாஸ் திருப்பம்

அதற்கு பின் இவர் போட்ட 10வது ஓவர் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. 10வது ஓவரில் வெறும் 3 ரன்கள்தான் கொடுத்தார். இந்த ஓவர் காரணமாக ஹைதராபாத் அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. அதன்பின் 15வது ஓவரில் வெறும் 9 ரன்கள்தான் இவர் கொடுத்தார்.

டெத் ஓவர்

டெத் ஓவர்

முந்தைய போட்டிகளில் சென்னை அணியின் டெத் ஓவர் பவுலர்கள் கொடுத்த ரன்களை விட குறைவாகவே பிராவோ ரன் கொடுத்தார். அதிலும் இவர் 19வது ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். மொத்தமாக 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே இவர் கொடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி கடைசி கட்டத்தில் மற்ற ஓவர்களில் ரன் அடித்தாலும், பிராவோ ஓவரில் முடங்கியது.

ஷர்த்துல் தாக்கூர்

ஷர்த்துல் தாக்கூர்

ஹைதராபாத் அணியை ஒடுக்க ஸ்கெட்ச் போட்டது என்னவோ பிராவோதான்.. ஆனால் செய்து முடித்தது ஷர்த்துல் தாக்கூர் என்றுதான் கூற வேண்டும். ஆம் ஷர்த்துல் தாக்கூர் மொத்தமாக போட்ட நான்கு ஓவர்களும் சிறப்பாக இருந்தது. தாக்கூர் தான் போட்ட 6வது ஓவரில் 9 ரன்கள் மட்டும்தான் கொடுத்தார். அதன்பின் தாக்கூர் 8வது ஓவரில் 5 ரன்கள்தான் கொடுத்தார்.

தாக்கூர் செம

தாக்கூர் செம

அதோடு தாக்கூர் தான் போட்ட16வது ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். பொதுவாக 15 ஓவர்களுக்கு பின் சிஎஸ்கே எப்போதும் ரன் கொடுக்கும். ஆனால் ஷர்த்துல் தாக்கூர் பெரிய அளவில் இந்த முறை ரன் கொடுக்கவில்லை. இதை எல்லாம் விட மிக முக்கியமாக தாக்கூர் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து போட்டியை மாற்றினார். நீண்ட நாட்களுக்கு பின் டெத் ஓவரில் சென்னை வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது.

விக்கெட்

விக்கெட்

அதேபோல் இவர் மிக முக்கியமான விக்கெட்டான மனிஷ் பாண்டே விக்கெட்டையும் எடுத்தார். எல்லோரும் இன்று பிராவோவின் பவுலிங்கைதான் எதிர்பார்த்தனர். ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்கமால் இன்று ஷர்த்துல் தாக்கூர் சிறப்பாக பந்து வீசி போட்டியின் போக்கை மாற்றி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் சிஎஸ்கே பவுலிங் சிறப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 2, 2020, 22:34 [IST]
Other articles published on Oct 2, 2020
English summary
IPL 2020: Two bowlers impressed in Chennai today match against Hyderabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+