Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ப்ரைஸ் தர போகும் அந்த "குட்டி" அணி.. இந்த 3 டீமிற்குதான் பைனல்ஸ் செல்ல வாய்ப்பு.. அதிரடி கணிப்பு!

துபாய்: 2020 ஐபிஎல் சீசனில் பைனல்ஸ் செல்ல வாய்ப்பு இருக்கும் அணிகள் எது என்று கிரிக்கெட் வல்லுநர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.

2020 ஐபிஎல் சீசன் அதிரடி திருப்பங்களுடன் நடந்து வருகிறது. டெல்லி மும்பை போன்ற அணிகள் இந்த சீசனில் மிகவும் வலிமையாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த முறை சிறப்பான ஆட்டம் ஆடி வருகிறது.

பைனல்ஸ்

பைனல்ஸ்

இந்த நிலையில் 2020 ஐபிஎல் சீசனில் பைனல்ஸ் செல்ல வாய்ப்பு இருக்கும் அணிகள் எது என்று கிரிக்கெட் வல்லுநர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார். அவர் தனது கணிப்பில், தொடக்கத்தில் மைதானங்கள் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. ஆனால் இனிமேல் பிட்ச் எல்லாம் ஸ்லோவாக மாறிவிடும்.

அதிக ரன்கள் எடுக்க முடியாது

அதிக ரன்கள் எடுக்க முடியாது

பெரிய அளவில் அதிக ரன்கள் எடுக்க முடியாது. நன்றாக பவுலிங், பேட்டிங் இரண்டும் செய்யும் அணிகள் மட்டுமே வெற்றிபெறும். 200 ரன்களை எல்லாம் இனி வரும் போட்டிகளில் அடிக்க முடியாது. அப்படியே அடித்தாலும் சேஸ் செய்ய முடியாது. இதனால் ஐபிஎல் தொடரில் போக போக ஆட்டங்கள் எல்லாம் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது .

மும்பை

மும்பை

இந்த தொடரில் பைனல்ஸ் செல்ல மும்பை அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மும்பை அணி சிறப்பான பவுலிங் ஆர்டர் கொண்டு இருக்கிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரும் சிறப்பாக இருக்கிறது. இதனால் மும்பைக்கு பைனல்ஸ் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

டெல்லி

டெல்லி

இன்னொரு பக்கம் டெல்லி அணிக்கும் பைனல்ஸ் செல்ல வாய்ப்பு உள்ளது. டெல்லி அணி முழுமையாக இருக்கிறது. அதேபோல் அணியில் மாற்று வீரர்களும் சரியாக இருக்கிறார்கள்.யாராவது காயம் அடைந்தாலும் மாற்று வீரர்களாக களமிறக்க பெரிய படையே டெல்லியிடம் உள்ளது. இதனால் டெல்லியை பைனல்சில் எதிர்பார்க்கலாம்.

பெங்களூர்

பெங்களூர்

இன்னொரு பக்கம் இந்த முறை பெங்களூர் எல்லா அணிகளுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க போகிறது. பெங்களூரை எல்லோரும் சின்ன அணி என்றுதான் நினைத்து வந்தனர். ஆனால் இந்த முறை பெங்களூர் அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. அந்த அணியின் சிறப்பான பிளேயிங் லெவன் இதுதான். இதனால் பெங்களூர் அணி பைனல்ஸ் செல்லவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

சென்னை

சென்னை

ஆனால் சென்னை அணிக்கு இந்த முறை பைனல்ஸ் செல்ல வாய்ப்பு இல்லை. கொல்கத்தா அணிக்கும் அந்த வாய்ப்பு இல்லை. இரண்டு அணிகளில் ஒரு அணி பிளே ஆப் செல்லலாம் .ஆனால் பைனல்ஸ் செல்வது கடினம் என்று கெவின் பீட்டர்சன் கணித்து உள்ளார்.

Story first published: Saturday, October 17, 2020, 14:16 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+