தோனியை பார்க்கணும்னு வந்தேன்.. நேற்று சிஎஸ்கே பிளானை காலி செய்த தமிழக வீரர்..3 வருட கனவு நிறைவேறியது
அபுதாபி: நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தார்.
கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. தொடக்கத்தில் சொதப்பிய கொல்கத்தா கடைசியில் ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
கொல்கத்தா அணியின் பேட்டிங் சொதப்பினாலும் கடைசி நேரத்தில் அந்த அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த 10 ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி சிஎஸ்கேவை கொல்கத்தா வீழ்த்தியது.

வீழ்த்தியது
நேற்று கொல்கத்தா அணியின் பவுலிங் ஆர்டர்தான் மொத்தமாக போட்டியின் போக்கையே மாற்றியது. 11 ஓவர்களுக்கு பிறகு நரேன், ரசல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இவர்கள் மூன்று பேரும்தான் ஓவர் வீசினார்கள். இவர்களின் ஓவரில்தான் தாக்கு பிடிக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அடிக்க முடியவில்லை
களத்தில் இருந்த வீரர்களும் சரியாக ரன் அடிக்க முடியாமல் கடுமையாக திணறினார்கள்.முக்கியமாக நரேன் மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் செய்த பவுலிங் பெரிய அளவில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தியது. நேற்று வருண் சக்ரவர்த்திதான் சிஎஸ்கேவில் கேப்டன் தோனியின் விக்கெட்டை எடுத்தது. இதுதான் மொத்தமாக சிஎஸ்கே பிளானை காலி செய்தது.

வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி போட்ட 17வது ஓவரின் 3வது பந்தில் தோனி அவுட்டானார். இதன் காரணமாகவே களத்திற்கு கேதார் ஜாதவ் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் மொத்தமாக சிஎஸ்கேவின் வெற்றி கனவு கலைந்து போனது. நேற்று வருண் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக பந்து வீசினார். சரியான லென்தில், மிக சரியான வேகத்தில் வருண் சக்ரவர்த்தி பவுலிங் செய்தார்.

பவுலிங்
நேற்று 4 ஓவர்கள் போட்ட வருண் சக்ரவர்த்தி வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மிஸ்டரி ஸ்பின் பவுலர் என்று அழைக்கப்படும் வருண் சக்ரவர்த்தி இந்த தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த தொடரில் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிலைமை என்ன
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டி குறித்து வருண் சக்ரவர்த்தி பேட்டி அளித்துள்ளார். அதில், 3 வருடங்களுக்கு முன் நான் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியை பார்க்க வேண்டும் என்று வருவேன். தோனி பயிற்சி எடுக்கும் போது, ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்து பார்த்து இருக்கிறேன்.

ஆசை
அப்போதெல்லாம் அவருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என்பது என் கனவு . தற்போது உண்மையாகவே அவருக்கு பவுலிங் செய்து இருக்கிறேன். அதோடு அவரை விக்கெட்டும் எடுத்துள்ளேன். எனக்கு இதை நம்பவே முடியவில்லை.

தமிழில் பேச வேண்டும்
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தமிழில் பேச நினைக்கிறேன். அவரிடம் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல வேண்டும். தல எப்போதும் தலதான், என்று குறிப்பிட்டு இருக்கிறார். வருண் சக்ரவர்த்தி தோனியின் தீவிர விசிறி. நேற்று நடந்த போட்டிக்கு பின் இவர் தோனியிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications