For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு அதெல்லாம் முக்கியமே இல்லை.. இது பர்சனல்.. எச்சரிக்கும் பாண்டிங்.. சிஎஸ்கே உஷாராக வேண்டும்!

துபாய்: என்ன நடந்தாலும் பிரச்சனை இல்லை, தன்னுடைய கவனம் முழுக்க வெற்றியின் மீதுதான் இருக்கும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கும் டெல்லிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. சார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

டெல்லி அணி ஏற்கனவே வலிமையாக உள்ள நிலையில் இன்று அணிக்குள் ரிஷாப் பண்ட் மீண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். வலுவான பேட்டிங் ஆர்டர்,பவுலிங் ஆர்டருடன் களமிறங்கும் டெல்லியை சிஎஸ்கே எப்படி எதிர்கொள்ள போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

பேட்டி

பேட்டி

சிஎஸ்கே - டெல்லி இடையே இன்று மேட்ச் நடக்க உள்ள நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கொடுத்த பேட்டியில் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் பொதுவாக பெவிலியனில் இருந்து போட்டியை பார்க்கும் போது உணர்ச்சிவசப்படுவேன். எனக்கு இந்த ஐபிஎல் தொடரும், டெல்லி அணியும் மிகவும் பர்சனலான விஷயம்.

வெற்றி

வெற்றி

இதன் காரணமாக போட்டியை பார்த்து நான் உணர்ச்சிவசப்படுகிறேன். அணியின் முடிவு எப்படி இருக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியம் . அணியின் வெற்றி மீதே என்னுடைய கவனம் இருக்கும். எனக்கு வேறு எதையும் பற்றி கவலை இல்லை. வீரர்கள் சரியாக ஆட வேண்டும். இதனால்தான் நான் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறேன்.

கடினம்

கடினம்

எங்கள் அணி கடினமாக உழைக்கிறது. நாங்கள் கடினமான திட்டங்களை வகுக்கிறோம். வீரர்களோடு தனிப்பட்ட வகையில் அமர்ந்து திட்டங்களை வகுக்கிறேன். இதை களத்தில் செய்ய வேண்டியது வீரர்களின் பொறுப்பு. அதனால்தான் நான் அதிகம் டென்ஷன் ஆகிறேன். வீரர்கள் சரியாக திட்டங்களை செயல்படுத்துவார்களா என்று டென்ஷன் ஆகிறது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி மோசமான தொடக்கத்தை கொடுத்தது. இதனால் அன்று அதிகம் டென்சன் ஆகிவிட்டேன். என்னுடைய அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள். கடைசி நொடி வரை போராடுங்கள் . வெற்றிபெற வாய்ப்பு இல்லாத போட்டியை கூட மாற்றுவதுதான் வீரர்களின் கடமை என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியம்

முக்கியம்

வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. அணியின் வெற்றிதான் முக்கியம் என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். அதோடு வீரர்கள் கடைசி வரை போராட வேண்டும், களத்தில் சரியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கறாராக பேசி உள்ளார். இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி அணி மோத உள்ளது.

பேட்டி

பேட்டி

இந்த போட்டி நடக்க உள்ள நிலையில் பாண்டிங்கின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான கேப்டன், வெற்றிகரமான கேப்டனாக ரிக்கி பாண்டிங் இருந்தார். தற்போது இவரின் பயிற்சியில் தயாரான வலுவான டெல்லியை இன்று சிஎஸ்கே எதிர்கொள்கிறது. ஏற்கனவே டெல்லியிடம் சிஎஸ்கே ஒருமுறை தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்று சிஎஸ்கே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டடுள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 12:45 [IST]
Other articles published on Oct 17, 2020
English summary
IPL 2020: Victory is all maters says Ricky Ponting on DC team plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+