பெரிய குழப்பம்..சிஎஸ்கே போட்டிக்கு நடுவே களத்திற்குள் வந்த தமிழக வீரர்.. எல்லாம் ஏமாற்று வேலையா?
துபாய்: சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.துபாய் பவுலிங் பிட்ச் என்பதால் இரண்டு அணியிலும் பேட்ஸ்மேன்கள் மோசமாக திணறினார்கள்.
ஆனால் இரண்டு அணியிலும் நேற்று பவுலிங் சிறப்பாக இருந்தது. போட்டி மொத்தமும் பவுலிங் ஷோவாக இருந்தது. பிராவோ, சரத்துல் தாக்கூர், தீபக் சாஹர், நடராஜன், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் என்று நேற்று இரண்டு அணியின் பவுலர்களும் மிக சிறப்பாக பந்து வீசினார்கள்.

பவுலிங்
சிஎஸ்கேவின் பேட்டிங் இந்த முறையும் மிக மோசமாக சொதப்பி உள்ளது. நேற்று 20 ஓவரில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை அணியில் ஜடேஜா, தோனி மட்டுமே அதிரடியாக ஆடினார்கள்.

மாற்றம் என்ன
நேற்று சென்னை அணியில் இருந்து இறங்கிய முரளி விஜய், ருது ராஜ், ஜோஸ் ஹசல்வுட் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிராவோ, அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அதே சமயம் ஹைதராபாத் அணியில் அதே வீரர்கள் களமிறங்கினர்.

கொல்கத்தா எப்படி
கொல்கத்தாவிற்கு எதிராக ஹைதராபாத் ஆடிய போட்டியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டார். அந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கரை ஹைதராபாத் அணி பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை. விஜய் சங்கர் முதுகில் காயம் உள்ளது என்று கூறி அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நீக்கம் ஏன்?
இவருக்கு பதிலாக சாகா உள்ளே வந்தார். விஜய் சங்கர் அதன்பின் வரிசையாக மூன்று போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடவில்லை. இவரை காயம் என்று கூறிதான் உட்கார வைத்தனர். ஆனால் நேற்று திடீர் என்று இவர் பீல்டிங் செய்ய வந்தார். புவனேஷ்வர் குமார் பாதியில் வெளியேறிய காரணத்தால் விஜய் சங்கர் பீல்டிங் செய்ய வந்தார்.

மாட்டார்
பொதுவாக காயமாக இருக்கும் வீரர்கள் இப்படி மாற்று வீரர்களாக களமிறங்க மாட்டார்கள். தண்ணீர் கேன் கொடுக்க கூட வர மாட்டார்கள். ஆனால் விஜய் சங்கர் நேற்று மாற்று வீரராக உள்ளே வந்தது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு உண்மையில் காயம் ஏற்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் சரியாக ஆடவில்லை என்று வேண்டுமென்றே உட்கார வைத்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

காயம் இருந்தால்
உண்மையில் காயம் இருந்தால் அவர் மாற்று வீரராக வந்திருக்க மாட்டார். அவருக்கு காயம் இல்லை. அவரை ஆடும் அணியில் இருந்து நீக்கி உள்ளனர் அவ்வளவுதான் என்று கூறப்படுகிறது. கடந்த உலகக் கோப்பை தொடரிலும் விஜய் சங்கர் சரியாக ஆடவில்லை. அப்போதும் இவர் பயிற்சியின் போது காயம் பட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications