Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உள்ளே வேகமாக வந்து ஆர்சிபி வீரரை சீண்டிய பாண்டிங்.. நடுவரிடம் தெறித்து ஓடிய கோலி.. பரபர சம்பவம்!

துபாய்: நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் மிகவும் கோபமாக காணப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடக்கிறது.

பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கூடிய 3 அணிகள் தற்போது தேர்வாகி உள்ளது. பெங்களூர், டெல்லி, மும்பை ஆகிய மூன்று அணிகள் இன்று பிளே ஆப் சென்றுள்ளது.

இன்று

இன்று

பிளே ஆப் செல்ல போகும் கடைசி அணி எது என்று இன்று உறுதியாகிவிடும் நேற்று பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இதில் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சென்றது. பெங்களூர் தோல்வி அடைந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று போட்டியின் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்டின் போது டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் மற்றும் பெங்களூர் கேப்டன் கோலி இடையே மோதல் வந்தது. பெங்களூர் அணி பவுலிங் செய்த போது.. கடைசி ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் கேட்டது. அப்போது வியூகத்தை வகுப்பதற்காக டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் மைதானத்திற்கு உள்ளே வந்தார்.

கோபம்

கோபம்

உள்ளே வந்த பாண்டிங்.. அங்கு நின்று கொண்டு இருந்த இரண்டு பெங்களூர் வீரர்களை பார்த்து கோபமாக கத்தினார். பீல்டிங்கின் போதே பாண்டிங் ஆர்சிபி வீரர்களை கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் மைதானத்திற்கு உள்ளே வந்த பாண்டிங்.. மிகவும் கோபமாக ஆர்சிபி வீரர்களை பார்த்து கத்தினார். ஆனால் இவர் ஏன் கத்தினார் என்று தெரியவில்லை.

சமாதானம்

சமாதானம்

இதை பார்த்து கோலி கோபம் அடைந்து வேகமாக பாண்டிங்கிடம் கத்துவதற்கு சென்றார். ஆனால் அவர் மூத்த வீரர், பயிற்சியாளர் என்பதால் கோலி அமைதியானார். பாண்டிங்கிடம் கோலி சண்டை போடவில்லை. அதன்பின் நடுவரிடம் வேகமாக சென்ற கோலி .. ரிக்கி பாண்டிங் குறித்து முறையீடு செய்தார். பின் ரிக்கி பாண்டிங்கை நடுவர்கள் சமாதானம் செய்தனர்.

Story first published: Tuesday, November 3, 2020, 9:51 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+