Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்திலேயே ஐபிஎல் தான் பெருசு.. அவங்க சிஸ்டமே வேற.. புகழ்ந்து தள்ளிய பாக். ஜாம்பவான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஐபிஎல் குறித்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் பாகிஸ்தான் நாட்டின் டி20 தொடரைக் காட்டிலும் ஐபிஎல் பல மடங்கு வித்தியாசத்தில் இருப்பதை சுட்டிக் காட்டினார் அவர்.

மேலும், ஐபிஎல்-இல் குவியும் பணம், பயிற்சியாளர்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

பிரம்மாண்டமான தொடர்

பிரம்மாண்டமான தொடர்

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. டி20 போட்டிகள் பிரபலம் ஆகுமா? என 2007இல் பெரிய விவாதம் நடந்து வந்தது. அப்போது இந்தியாவில் டி20 போட்டிகளை வைத்து பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடராக உருவானது ஐபிஎல்.

பணம், ரசிகர்கள்

பணம், ரசிகர்கள்

ஐரோப்பிய கால்பந்து தொடர்கள், அமெரிக்க கூடைப்பந்து தொடர் உள்ளிட்டவற்றை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட ஐபிஎல் தொடர் பணம், ரசிகர்கள் விஷயத்தில் ஐசிசி தொடர்களைக் கூட தோற்கடித்தது. அந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தது.

பெரிய வளர்ச்சி

பெரிய வளர்ச்சி

ஐபிஎல் வந்த பின் டி20 போட்டிகள் பெரிய வளர்ச்சியை சந்தித்தன. அதன் பின் ஒவ்வொரு முன்னணி கிரிக்கெட் நாடும், தங்களுக்கென ஒரு டி20 தொடரை உருவாக்கியது. ஆனால், யாராலும் ஐபிஎல் அளவுக்கு வளர முடியவில்லை.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் தொடர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பால் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் வளர்ச்சி குறித்து பல முறை பேசி இருக்கிறார் வாசிம் அக்ரம். ஒருமுறை பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பந்துவீச்சாளர்களின் தரம் ஐபிஎல் தொடரில் இல்லை என கூறி இருந்தார்.

சிஸ்டம்

சிஸ்டம்

ஆனால், சமீபத்தில் ஐபிஎல் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வாசிம் அக்ரம், ஐபிஎல் தொடரின் "சிஸ்டத்தை" புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் இடையே பெரிய வித்தியாசம் உள்ளதாக குறிப்பிட்டார்.

பெரிய வித்தியாசம் உள்ளது

பெரிய வித்தியாசம் உள்ளது

"கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளனர். உலகிலேயே பெரிய கிரிக்கெட் தொடர் ஐபிஎல் தான்" என ஐபிஎல்-இல் செய்யப்பட்டுள்ள முதலீடு குறித்து நேரடியாக பாராட்டினார் வாசிம் அக்ரம்.

பணம்

பணம்

"வீரர்களை வாங்க ஒரு அணியின் பட்ஜெட் 60 முதல் 80 கோடி.. இந்திய மதிப்பில்.. நம் (பாகிஸ்தான்) மதிப்பில் இது இரண்டு மடங்கு. இந்த அளவு பணத்தில் லாபம் வரும் போது பிசிசிஐ அதை முதல் தர கிரிக்கெட்டில் முதலீடு செய்கிறது." என்றார் அக்ரம்.

தனிப்பட்ட பயிற்சியாளர்கள்

தனிப்பட்ட பயிற்சியாளர்கள்

"ஐபிஎல்-இல் பல வீரர்கள் தங்களுக்கென தனிப்பட்ட பயிற்சியாளர்களை வைத்துள்ளனர், பிரவீன் ஆம்ரே போல. அவர்கள் அது போன்ற நல்ல பயிற்சியாளர்களாக மாறிய முன்னாள் வீரர்களை நியமிக்கின்றனர். அவர்கள் பேட்ஸ்மேனை பார்த்தால் அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பது தெரியும். அவர்கள் சிஸ்டம் முற்றிலும் வேறு" என பாராட்டித் தள்ளினார் வாசிம் அக்ரம்.

Story first published: Friday, July 31, 2020, 21:38 [IST]
Other articles published on Jul 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+