Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கையை தூக்க தயார்".. சொல்லிவிட்டு வந்த வாட்சன்.. போட்டிக்கு முன் நடந்த சம்பவம்.. கம்-பேக் பின்னணி!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்..சிஎஸ்கே ஒப்பனர்கள் அடித்து தூள் கிளப்பி உள்ளனர்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் கடந்த நான்கு போட்டிகளாக கடுமையாக திணறி வந்தது. முக்கியமாக முதல் போட்டியில் மட்டுமே ராயுடு தயவில் சிஎஸ்கே மும்பையை வீழ்த்தியது.

அதன்பின் அடுத்தடுத்து ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் என்று முக்கியமான அணிகளிடம் சிஎஸ்கே வீழ்ந்தது. சிஎஸ்கேவின் மோசமான தோல்விக்கு அணியின் பேட்டிங்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

மோசம் பேட்டிங்

மோசம் பேட்டிங்

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அணியின் ஓப்பனிங் பேட்டிங் காரணமாக பார்க்கப்பட்டது. முக்கியமாக முரளி விஜய் மற்றும் வாட்சன் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. முரளி விஜயின் மோசமான பேட்டிங் காரணமாக அவர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். ஆனால் வாட்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு வழங்கப்பட்டது

வாய்ப்பு வழங்கப்பட்டது

கடந்த போட்டியிலும் வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வாய்ப்பு கிடைத்தும் சரியாக ஆடவில்லை. இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இனியும் வாட்சனுக்கு வாய்ப்பு வழங்க கூடாது. அவருக்கு பதில் வேறு ஓப்பனிங் வீரரை கொண்டு வர வேண்டும் கோரிக்கைகளில் வைக்கப்பட்டது.

நிறைய கோரிக்கைகள்

நிறைய கோரிக்கைகள்

ஆனால் கோரிக்கைகளை தாண்டி இன்று வாட்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் தோனியின் முடிவில் தவறு இல்லை என்று வாட்சன் நிரூபித்து இருக்கிறார். தொடக்கத்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து இன்னிங்க்ஸை தொடங்கிய வாட்சன் முதல் பவர் பிளேவில் மாஸ் ஆட்டம் ஆடினார்.

ஆட்டம் போட்டார்

ஆட்டம் போட்டார்

முதல் 6 ஓவரில் சிஎஸ்கே 60 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. அதன்பின் வேகம் எடுத்த வாட்சன் சிக்ஸர் , பவுண்டரி என்று அதிரடி காட்ட தொடங்கினார். வெறும் 33 பந்துகளில் இதன் மூலம் வாட்சன் 55 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரி, 1 சிக்ஸ் அடக்கம். இதன் மூலம் சிஎஸ்கே 10 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. இன்னொரு பக்கம் 33 பந்தில் டு பிளசிஸ் 50 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

நீக்கம் ஏன்

நீக்கம் ஏன்

இந்த போட்டியில் சொதப்பினால் வாட்சன் நீக்கப்படுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். வாட்சனும் தனது தவறை ஒப்புக்கொண்டே இன்று களத்திற்கு வந்தார். இந்த போட்டிக்கு முன் வாட்சன் தெரிவித்த கருத்தில், மிடில் ஆர்டரில் ஆடும் வீரர்கள் மீது நாங்கள் அதிக பிரஷர் போடுகிறோம். தொடக்க வீரர் என்ற வகையில் நானே இதை ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் மீது தவறு உள்ளது.. என் மீதான தவறை கை தூக்கி ஏற்றுக்கொள்ள தயார்.

மிடில் ஆர்தர் வீரர்கள்

மிடில் ஆர்தர் வீரர்கள்

எங்களால் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிக பிரஷரை சந்திக்கிறார்கள். அவர்களால் சரியாக ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாததற்கு இதுதான் காரணம். தொடக்கம் சரியாக இல்லாமல் போனதே இதற்கு காரணம். எங்கள் ஆட்டத்தில் சில விஷயங்களை மாற்ற வேண்டும். நாங்கள் ஆடும் போக்கில் சில விஷயங்களை மாற்றினால் எல்லாம் சரியாகும், அடுத்த போட்டியில் மாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

சொன்னபடி செய்தார்

சொன்னபடி செய்தார்

நான் தவறு செய்கிறேன் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுதான் வாட்சன் களத்திற்கு வந்தார். என் மீது தவறு உள்ளது வாட்சன் கையை தூக்கிவிட்டுதான் களத்திற்கே வந்தார். தோனியும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில்தான் தனக்கு கொடுத்த வாய்ப்பை தற்போது வாட்சன் சரியாக பயன்படுத்திக்கொண்டார். உங்களை ஏமாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டு சிஎஸ்கேவிற்காக இன்று மாஸ் ஆட்டம் ஆடினார்.. வாட்டே வாட்சன்.. சூப்பர் கம் பேக்!

Story first published: Monday, October 5, 2020, 8:06 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+