Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை எல்லாம் என்னால் தடுக்க முடியாது.. ஆர்சிபியால் அதிர்ந்து போன தினேஷ் கார்த்திக்.. என்ன சொன்னார்?

துபாய்: பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் ஆதிக்கம் செலுத்தியது.

கொல்கத்தா அணியில் சுனில் நரேன் இல்லாத காரணத்தாலும், தினேஷ் கார்த்திக் எடுத்த சில தவறான முடிவுகளாலும் கொல்கத்தா அணி கடுமையாக திணறியது.

திணறல்

திணறல்

முக்கியமாக கொல்கத்தா அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் மோசமாக இருந்தது. கொல்கத்தா அணியில் பேட்டிங் இறங்கிய எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தனர். முதலில் களமிறங்கிய பெங்களூர் ஏபிடி அதிரடியாக 194 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய கொல்கத்தா வெறும் 112 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் மிகவும் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். கொல்கத்தா இப்படி மோசமாக தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியாமல் அவர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருந்தார். அவர் தனது பேச்சில், ஆட்டம் இரண்டாவது பாதியில் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது .

ஏபிடி

ஏபிடி

டி வில்லியர்ஸ் எல்லாம் உலகத்தரமான வீரர். அவரை எல்லாம் எங்களால் தடுக்க முடியாது. அதுவும் இதுபோன்ற மைதானத்தில் அவரை எல்லாம் எங்களால் தடுக்கவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம்தான் இரண்டு அணிக்கும் இடையிலான வேறுபாடாக மாறிவிட்டது. சில விஷயங்களை நாங்கள் மாற்ற வேண்டும்.

உட்கார்ந்து பேச வேண்டும்

உட்கார்ந்து பேச வேண்டும்

அணி வீரர்கள் ஒன்றாக உட்கார்ந்து சில விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். எங்கே சறுக்கியது என்று ஆராய வேண்டும். எங்களுக்கு மூன்று நாட்கள் பிரேக் இருக்கிறது. இந்த இடைவெளியில் நாங்கள் நன்றாக ஆலோசனைகளை செய்ய வேண்டும். சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

பிரஷ்

பிரஷ்

மூன்று நாட்களுக்கு பின் நாங்கள் நல்ல மனநிலையுடன் களமிறங்க வேண்டும். ஐபிஎல் தொடர் இதுவரை நன்றாக அமைந்து உள்ளது. முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக இருந்துள்ளது. சில சமயங்களில் கேப்டன்களுக்கு எதுவும் கை கூடி வராது. போடும் திட்டங்கள் எதுவும் பலன் அளிக்காது. இன்றைய தினம் கொல்கத்தாவிற்கு அப்படி அமைந்துவிட்டது, என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:58 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+