
பிளே ஆப் விவரம்
அணிகள் பிளே ஆப் செல்லுமா என்பது குறித்து பார்க்கும் முன், இதற்கு முன் நடந்த சீசன்களில் அணிகள் எப்படி பிளே ஆப் சென்றது என்று பார்க்கலாம். 2011,2012, 2013, 2017 சீசன்களில் எல்லாம் 14 போட்டிகளில் 7 போட்டிகள் வென்ற அணிகள்தான் பிளே ஆப் சென்றுள்ளது. 50% போட்டிகளில் வென்ற அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணிகள் அனைத்திற்கும் ரன் ரேட் பாசிட்டிவாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை
இதனால் இந்த வருடமும் இதேபோல் 7 போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்த முறை கண்டிப்பாக மும்பை பிளே ஆப் செல்லும். 6 போட்டிகளில் மும்பை 4 போட்டிகளில் வென்றுள்ள நிலையில் இன்னும் 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் போதும் எளிதாக பிளே ஆப் சென்றுவிடும்.

அடுத்த அணி
அடுத்ததாக இந்த தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக டெல்லி உள்ளது. 5 போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டெல்லி தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகளில் டெல்லி வென்றுள்ளது. இன்னும் 9 போட்டிகளில் 3ல் வென்றால் டெல்லி பிளே ஆப் செல்லும். அந்த அணி இருக்கும் பார்மிற்கு கண்டிப்பாக டெல்லி பிளே ஆப் செல்லும்.

ஹைதராபாத்
இந்த தொடரில் தொடக்கத்தில் ஹைதராபாத் மிக மோசமாக ஆடி தோல்விகளை தழுவியது. ஆனால் அதே ஹைதராபாத் தற்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அடுத்தடுத்து வெற்றிபெற்றது. மொத்தம் 6 போட்டிகளில் 3 போட்டிகளில் ஹைதராபாத் வென்றுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணிக்கு பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. இன்னும் 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஹைதராபாத் பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தா பெங்களூர்
பிளே ஆப் செல்வதற்கு பெங்களூர் மற்றும் கொல்கத்தாவிற்கும் இடையில் பிளே ஆப் செல்ல அதிக போட்டி நிலவி வருகிறது. இரண்டு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்றுள்ளது. இரண்டு அணிகளின் ரன் ரேட் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டு அணிகளுக்கும் இடையில் பிளே ஆப் செல்ல கடுமையான போட்டி நிலவுகிறது. 9 போட்டிகளில் 4 போட்டிகளில் இரண்டு அணிகளும் வெல்ல வேண்டும்.

சிஎஸ்கே
சிஎஸ்கேவிற்கும் பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. 6 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது. மீதம் உள்ள 8 போட்டிகளில் 5 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும். அதேபோல் மிக சிறப்பான ரன் ரேட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்புகள் உள்ளது.

ராஜஸ்தான்
இந்த கணக்கை வைத்து பார்த்தால் ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்த அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கை சரி செய்ய வேண்டும். அந்த அணி 5 போட்டிகளில் 2ல் வென்றுள்ளது. இன்னும் 5 போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற வேண்டும்.

பஞ்சாப் எப்படி
பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல வாய்ப்பே அதிகம் இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்து உள்ளது. மீதம் இருக்கும் 8 போட்டிகளில் 6 போட்டியில் பஞ்சாப் வெல்ல வேண்டும். ஆனால் இது மிகவும் கடினம் என்பதால் பஞ்சாப்தான் இந்த சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications